தாத்தா செய்த காரியத்தால், மகன் சித்தப்பாவான கொடுமை... டிக் டாக்கில் கண்ணீர் வடித்த இளைஞர்!!

மகன் சித்தப்பாவான விநோதம்

நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் உங்கள் கேர்ள் ஃப்ரண்ட் உங்களை ஏமாற்றினார் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர்.

 • Share this:
  டிக் டாக்கில் தனது வாழ்க்கையில் நடந்த விநோத சம்பவத்தை பகிர்ந்து கொண்டவரின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  டிக் டாக்கில் @stacks1400 என்ற ஐடியில் உள்ள அந்த நபர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த விநோதமான கதை உங்கள் சக உறவுகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும். இத்தனை ஆண்டுகளாக எனது மகன் என்று நம்பிய குழந்தை, எனது சித்தப்பாவாக மாறிய கொடுமை எனக்கு நிகழ்ந்துள்ளது.

  நானும், எனது தாத்தாவும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், எனது கேர்ள் ஃப்ரண்ட் உடன் அவருக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் எனது கேர்ள் ஃப்ரண்டிற்கு பிறந்த குழந்தையை, நான் எனக்கு பிறந்த குழந்தை என நினைத்து இத்தனை வருடங்கள் வளர்த்து வந்தேன். ஆனால், தற்போது அந்த குழந்தை எனது கேர்ள் ஃப்ரண்டிற்கும், தாத்தாவிற்கும் பிறந்த குழந்தை என தெரியவந்தது. இப்படி ஒரு சம்பவம் எனது வாழ்வில் நிகழும் என நினைத்து பார்க்கவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரின் இந்த உருக்கமான வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் உங்கள் கேர்ள் ஃப்ரண்ட் உங்களை ஏமாற்றினார் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர்.

  இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அதில், ஒருநாள் எதர்ச்சையாக எனது கேர்ள் ஃப்ரண்ட் போனை பார்த்தபோது, அதிலிருந்த புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மூலம் அவருக்கும் எனது தாத்தாவுக்கும் இருந்த தொடர்பு குறித்து தெரியவந்தது. இதன் பின்னரே பிறந்த குழந்தை யாருடையது என்பதை தெரிந்தகொள்ள டிஎன்ஏ சோதனை மேற்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Also read: Google Trending:'ஒரே பிரசவத்தில் 10 குழந்தை...எல்லாம் பொய்,பிரம்மாண்ட இயக்குனர் வீட்டில் டும்டும்...மவுசு காட்டும் மாம்பழம்' - இன்றைய கூகுள் ட்ரெண்ட்

  மேலும், அந்த நபர் மற்றொரு வீடியோவில், தனது கேர்ள் ஃப்ரண்ட் செய்த குற்றத்திற்காக ஒருபோதும், பிறந்த குழந்தையை தண்டிக்க விரும்பவில்லை என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார். அந்த குழந்தையை அதே அன்புடனும், அக்கறையுடனும் தான் வளர்க்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், நெட்டிசன்கள் பலரும் நம்பிக்கையுடன் இருக்கும்படி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Esakki Raja
  First published: