காதுக்குள் கூச்சம்.. ஹெட்போனை கழட்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. (வைரலாகும் வீடியோ)

ஹெட்ஃபோன்களுக்குள் ஒரு பெரிய சிலந்தி இருக்கும் போது என்ன நடக்கும் என்கிற வாக்கியங்களுடன் ஒரு வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதுக்குள் கூச்சம்.. ஹெட்போனை கழட்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. (வைரலாகும் வீடியோ)
ஹெட்செட்டில் சிலந்தி
  • Share this:
உங்கள் ஹெட்ஃபோன்களுக்குள் ஒரு பெரிய சிலந்தி இருக்கும்போது என்ன நடக்கும் என்கிற வாக்கியங்களுடன் ஒரு வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பிளம்பர் தனது ஹெட்ஃபோன்களால் ஏற்பட்ட கூச்சம் போன்ற உணர்வால் அவரது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. பின்னர் அவர் அவற்றைக் கழற்றியபோது, மென்மையான திணிப்புக்குள் தஞ்சமடைந்து கொண்டிருந்த ஒரு பெரிய வேட்டைக்காரர் சிலந்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பெர்த்தில் வசிக்கும் ஆலி ஹர்ஸ்ட் இது குறித்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், அராக்னிட் என்ற ஒரு சிலந்தி வகை ஹெட்ஃபோன்களுக்கு உள்ளே இருந்தது. ஹெட்போனை வேகமாக அசைத்தும், தட்டியும் அதை வெளியேற்ற முயற்சிக்கிறார். இருப்பினும், சிலந்தி அங்கேயே தங்கியிருந்தது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும் கேஜெட்டை எரித்து விடு என கமெண்ட் செய்திருந்தனர்.

மேலும் அந்த வீடியோ கிளிப்பில் பேசிய ஹர்ஸ்ட் , "எனக்கு முற்றிலும் தெரியும் என் காதில் ஏதோ ஒரு கூசுவது போன்ற உணர்வை என்னால் உணர முடிந்தது, ”என்று கூறியிருந்தார். அவர் சாதனத்தைத் தட்டிக் கொண்டே இருக்கும்போது, பூச்சி வெளியே வர மறுத்தது. "அவர் வெளியே வர விரும்பவில்லை. அவர் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் ” எனக்கூறிய ஹர்ஸ்ட், ஹெட்ஃபோன்களைக் கீழே வைத்து விட்டு விலகிச் செல்வதற்கு முன்பு சிரித்ததை போன்று வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோ விரைவில் வைரலாகி பேஸ்புக் பயனர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கருத்துகளைப் பெற்றது. பேஸ்புக்கில் சிலர் ஹெட்ஃபோன்களை மீண்டும் பயன்படுத்துவதை விட புதிய சாதனத்தை வாங்கு எனக் கூறினர். “காதுகுழாய்களை கைவிட்டு, காற்றைப் போல ஓடுங்கள்! என ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், மற்றொருவர் நகைச்சுவையாக "உங்கள் ஹெட்ஃபோன்களை எரித்தீர்களா?" என கமெண்ட் செய்துள்ளார். இருப்பினும், சிலந்தி அவ்வளவு ஆபத்தானது அல்ல என்றும் சிலர் சுட்டிக்காட்டினர்.

இதுகுறித்து, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் கூறியதாவது, “பெரும்பாலும் பெரிய மற்றும் பயங்கர உருவம் இருந்த போதிலும், வேட்டைக்கார சிலந்திகள் ஆபத்தான சிலந்திகளாக கருதப்படுவதில்லை. பெரும்பாலான சிலந்திகளைப் போலவே, அவை விஷத்தையும் கொண்டிருக்கின்றன. மேலும் அதன் ஒரு கடி சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், அவைகள் கடிக்க மிகவும் தயங்கும் ஒன்றாகும். பொதுவாக இந்த வகை சிலந்திகள் ஆக்ரோஷமாக இருப்பதை விட ஆபத்துகளில் இருந்து ஓடுவதையே விரும்பும்". என தெரிவித்துள்ளது.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading