கோரக்பூரில் இளைஞர் ஒருவர் பசியால் வாடும் குரங்குகளுக்கு வாழைப்பழங்களை காரில் எடுத்து வந்து குரங்குகளின் பசியை போக்கிய செயல் இணையத்தில் பாராட்டு பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாலைகளில் நடமாடும் விலங்குகள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றது. சில தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து விலங்குகளுக்கு உதவி வருகின்றனர். இதனிடையே கோரக்பூரில் இளைஞர் ஒருவர் வாழைப்பழங்களை சேகரித்து குரங்குகளின் பசிபோக்கி வருகின்றார்.
இளைஞரின் இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.
இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காவலர் ஒருவர் குரங்கிற்கு வாழைப்பழம் ஊட்டிய செயல் இணையத்தில் அதிகம் வைரலானது.
Police Officer feeding an amputee Monkey. pic.twitter.com/7IKBGLlAy6
— Khushboo Soni (@Khushboo_) April 17, 2020
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.