கிணற்றில் இறங்கி மலைப்பாம்பை மீட்க முயன்ற வனத்துறை ஊழியர்...! வைரல் வீடியோ

கிணற்றில் இறங்கி மலைப்பாம்பை மீட்க முயன்ற வனத்துறை ஊழியர்...! வைரல் வீடியோ
News18
  • Share this:
வனத்துறை ஊழியர் ஒருவர் துணிச்சலாக கிணற்றுக்குள் கயிறு மூலமாக சென்று மலைப்பாம்பை மீட்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றது.

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் என்ற பகுதியில் கிணற்றுக்குள் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சாகில் என்ற வனத்துறை ஊழியர், கிணற்றுக்குள் கயிறு மூலமாக இறங்கி பாம்பை மீட்க முயற்சித்தார்.

மிகவும் கடினமாக முயற்சியில் பாம்பைப் பிடித்த அவர் மேலே ஏற முயற்சித்தார். ஆனால், பாம்பு அவரின் உடலை சுற்றி வளைக்கத் தொடங்கியது. எனினும், பாம்பை விடாமல் ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறுகையால் கயிறைப் பிடித்து அவர் மேலே ஏறினார்.


மேலே, ஏற முயற்சிக்கையில் திடீரென அவர் பாம்புடன் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். பின்னர், நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

“முதலில் கன்னி வைத்து பிடிக்க முயற்சித்தோம். ஆனால், கிணறு ஆழமாக இருந்ததால் அதில் சிக்கல் இருந்தது. எனவே, கீழே இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்தேன்” என்று சாகி கூறியுள்ளார்.

சாகி மலைப்பாம்பை பிடிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading