ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தலையை துண்டிக்க இருந்த லிப்ட்.. நூலிழையில் தப்பித்த இளைஞர் - ஷாக் வீடியோ

தலையை துண்டிக்க இருந்த லிப்ட்.. நூலிழையில் தப்பித்த இளைஞர் - ஷாக் வீடியோ

லிப்டில் சிக்கிய இளைஞர்

லிப்டில் சிக்கிய இளைஞர்

அப்போது அவர் தலை வெளியே சிக்கி துண்டிப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்ட இளைஞர் பின்னே குதித்ததால் நூலிழையில் உயிர் தப்பினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaRussiaRussiaRussia

  மொபைல் போன் பார்த்துக்கொண்டே சென்ற இளைஞர் லிப்டில் ஏற முயன்ற போது லிப்ட் தீடிரென கீழே சென்ற நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சி வெளியாகியிள்ளது.

  ரஷ்யா, க்ராஸ்னோடார் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது அப்பார்மெண்ட் லிப்ட்டில் ஏற நின்று கொண்டிருந்தார். லிப்ட் வந்ததும் மொபைல் போன் பார்த்து கொண்டே லிப்டில் ஏற முற்பட்டார். ஆனால் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்ட் இயங்கி மேலே சென்றது.

  அப்போது அவர் தலை வெளியே சிக்கி துண்டிப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்ட இளைஞர் பின்னே குதித்ததால் நூலிழையில் உயிர் தப்பினார்.

  இது குறித்து அந்த அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் கூறுகையில், ஏற்கனவே அந்த லிப்ட் ஒரு வாரமாக அதிர்ந்து கொண்டு இருந்தது என தெரிவித்தனர். மேலும் இதேபோல் கடந்த மாதம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்டில் பழுதானதில் இளைஞர் ஒருவர், இரவு முழுவதும் லிப்டில் மாட்டிக்கொண்டார் எனவும் கூறினர்.

  இதையும் வாசிக்க: ஆனந்த் மஹிந்த்ரா சொன்ன Monday Motivation...வைரலாகும் வீடியோ

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Russia, Trending Video, Viral Video