• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • டிராஃபிக் ஜாமை தவிர்க்க நினைத்து வாகன ஓட்டி செய்த செயல் - வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

டிராஃபிக் ஜாமை தவிர்க்க நினைத்து வாகன ஓட்டி செய்த செயல் - வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

டிராஃபிக் ஜாமை தவிர்க்க நினைத்து வாகன ஓட்டி செய்த செயல்

டிராஃபிக் ஜாமை தவிர்க்க நினைத்து வாகன ஓட்டி செய்த செயல்

கார் வைத்திருக்கும் ஒருவர் பிறரிடம் போதுமான பணத்தை வாங்கி கொண்டு வழக்கமாக அவர்களை பிக்கப் மற்றும் ட்ராப் செய்வார்.

  • Share this:
ஆன்லைனில் பல விசித்திரமான நிகழ்வுகள் மற்றும் செய்திகள் வைரலாகி நெட்டிசன்களிடையே பிரபலமாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நினைத்த கார் ஓட்டுநர் ஒருவர் செய்த காரியம் குறித்து அந்நாட்டின் சஃப்போக் கவுண்டி (Suffolk County) போலீசார் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கும் போஸ்ட் ஒன்று மக்களை சிரிக்க வைப்பதுடன் வைரலாகியும் வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளின் சாலைகளிலும் பொதுவாக காணப்படும் பிரச்னை போக்குவரத்து நெரிசல் தான்.
வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், சாலையில் ஏற்படும் டிராஃபிக் ஜாம் என்பது எவ்வளவு பெரிய நாடுகளையும் விட்டு வைப்பதில்லை. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல. எனவே அந்நாட்டில் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க ஹை ஆக்குபேன்ஸி வெஹிகிள் லேன்ஸ் (high-occupancy vehicle lans) என்ற தனி பாதை ஒன்று அமைக்கப்பட்டு அந்த வழியிலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த லேனில் எல்லா வாகனங்களும் பயணிக்க முடியாது. ஏனென்றால் இந்த HOV லேன் கார்பூல்கள், வேன்பூல்கள், அவசரகால சேவைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பு பாதையாகும். கார்பூலிங் அல்லது வேன்பூலிங் என்பது ஒரே இடத்தில் இருந்து வேலைகளுக்கு செல்லும் பல மக்கள் தனித்தனி கார்கள் அல்லது வாகனங்களில் பயணிப்பதால் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க உதவும் சிஸ்டம். இது ரைட் ஷேரிங் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதில் கார் வைத்திருக்கும் ஒருவர் பிறரிடம் போதுமான பணத்தை வாங்கி கொண்டு வழக்கமாக அவர்களை பிக்கப் மற்றும் ட்ராப் செய்வார். இதனால் அவருக்கும் எரிபொருளுக்கான பணம் மிச்சமாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க உதவுகிறது. சமீபத்தில் சாதாரண வாகனங்கள் செல்லும் லேனில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை கண்ட கார் ஓட்டுநர் ஒருவர், சாமர்த்தியமாக ட்ராஃபிக்கை தவிர்க்க நினைத்தார்.

Also read... டேட்டிங் சென்ற பெண்ணிடம் அங்கு செலவழித்த ரூ.350 திருப்பி கேட்ட நபர் - வைரலான ட்விட்டர் பதிவு!

எனவே அருகில் இருந்த முன் சீட்டில் ஒரு ஆள் உட்கார்ந்திருப்பது போல ஒரு கருப்பு ஜாக்கெட், ஒரு தொப்பி மற்றும் ஹெட்ரெஸ்டில் ஹூட்டை கொண்டு கவர் செய்து செட் செய்து விட்டார். தூரத்திலிருந்து பார்க்க ஓட்டுனருக்கு அருகில் மற்றொரு நபர் உட்கார்ந்திருப்பதை போலவே தோற்றமளிப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, HOV லேனில் நுழைந்து காரை ஒட்டி சென்றுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Suffolk County Police (@scpdhq)


ஆனால் அங்கிருந்த அதிகாரி ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட காரை நிறுத்தி கண்ணாடியை திறக்க சொல்லி பார்த்த போது அந்த ஓட்டுனரின் குட்டு வெளிப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு மாற்று லேனில் அவர் திருப்பி விடப்பட்டார். இது தொடர்பான போட்டோவை Suffolk County போலீஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறது. இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: