காதலிக்காக பெண் வேடமணிந்து தேர்வு எழுதி மாட்டிய காதலன் - அடுத்து நடந்தது என்ன?

ஆள்மாறாட்டம் செய்த நபர்

காதலிக்காக பெண் போல வேடமணிந்து கொண்டு தேர்வு எழுதி காதலன் மாட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

 • Share this:
  ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான செனிகலில் தன்னுடைய காதலிக்காக இளைஞர் செய்த சம்பவம் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது. காதலுக்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் காதலுக்காக இளைஞர்கள் எந்த நம்பமுடியாத காரியங்களைச் செய்ததையும் பல தருணங்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் செனிகல் நாட்டில் நடைபெற்றுள்ளது.

  செனிகல் நாட்டைச் சேர்ந்தவர் காதிம் மபூப். அவருக்கு வயது 22. அவருடைய காதலி காங் டியும். அவருக்கு வயது 19. காதிமின் காதலி காங்டியும்க்கு கல்லூரித் தேர்வு இருந்துள்ளது. அவர், ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்துவிடுவேன் என்று அச்சப்பட்டு காதிமிடம் அழுதுள்ளார். அதனையடுத்து, காதலிக்கு உதவ முடிவு செய்த காதிம், அதற்காக பல நாட்கள் திட்டமிட்டுள்ளார். அதனையடுத்து, பெண்போல வேடமணிந்துகொண்டு சென்ற தேர்வு எழுதலாம் என்று முடிவு செய்தார் காதிம்.

  காதலன், காதலி


  தேர்வு தேதியன்று தலையில் பெண் போல விக் வைத்துக்கொண்டு துணியைக் கொண்டு தலையை மூடிக் கொண்டு, பெண்கள் உடை, கம்மல் போன்றவற்றைப் போட்டுக் கொண்டு தேர்வுக்குச் சென்றுள்ளார். காதிமின் திட்டம் மூன்று நாள்களுக்கு பலித்துள்ளது. மூன்று நாள்களுக்கு தொடர்ந்து தேர்வு எழுதிவிட்டார். நான்காவது நாள் தேர்வு எழுதும், தேர்வு அறை கண்காணிப்பாளர் சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். அப்போது காதிம் மாட்டிவிட்டார். பின்னர், காவல்துறை வந்து காதிமைக் கைது செய்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காவல்துறை விசாரணையின்போது, காதலிக்காக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேசிய அளவிலான தேர்வுகளை ஐந்து ஆண்டுகளுக்கு எழுத தடை செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
  Published by:Karthick S
  First published: