மனிதராக பிறந்த யாராக இருந்தாலும் வாழ்நாளில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அது சாதாரணமான விஷயமாக இருக்கலாம் அல்லது பெரிய அளவில் ஒரு விஷயத்தை செய்தாக வேண்டும் என்கிற இலட்சியமாக கூட இருக்கலாம். சிறு வயது முதலே சில விஷயங்களை செய்து பெரிய அளவில் சாதனையாளராக வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கும். சிறிய விஷயங்களை செய்து பெரிய அளவில் சாதனை செய்வதர்களும் உண்டு. அதே போன்று பெரிய விஷயங்களை வினோதமான முறையில் முயற்சி செய்து அதில் சாதனை படைத்தவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு விபரீத சாதனையை தான் ஹெலிகாப்டர் மூலம் ஒரு இளைஞர் முயற்சி செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு பதிவிட்டுள்ளது. ரோமன் என்கிற 23 வயது இளைஞர் தான் இந்த சாதனை முயற்சியை செய்துள்ளார். பறக்கும் ஹெலிகாப்டரில் அதன் கீழ் பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு இவர் புல் அப்ஸ் செய்துள்ளார். இது கேட்கவே சற்று திகிலாகவே இருக்கும். நமக்கெல்லாம் ஹெலிகாப்டரில் உள்ளே உட்கார்ந்து பறப்பதே பெரிய சாதனையாக இருக்கும்போது இந்த இளைஞருக்கு பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப் செய்ய வேண்டும் என்கிற நோக்கும் இருந்துள்ளது.
இந்த வீடியோவில், ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் மெதுவாக மேலெழும்பி பறக்க தொடங்குகிறது. அதன் பிறகு சில நிமிடங்களில், விமானம் பறக்கத் தொடங்கும் போது, அந்த நபர் தரையிறங்கும் ஸ்லைடுகளில் ஒன்றைப் பிடித்துக் கொள்கிறார். பிறகு ஹெலிகாப்டரில் இருந்து காற்றில் தொங்கியபடி சிறிது நேரம் புல் அப்ஸ் செய்கிறார். இது பார்ப்பதற்கு அசாத்தியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் புல்அப்ஸ் செய்யும் வீடியோ லிங்க் இங்கே.
இந்த வீடியோவை 7 மணி நேரத்திற்கு முன்னர் பதிவிட்டு உள்ளனர். இதுவரை 82,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். பலர் ரோமனின் இந்த வினோத முயற்சி குறித்து தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து உள்ளனர். இவை படிப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதில் ஒருவர் "இது மிகவும் ஆபத்தானது" என்று ஒரு பதிவிட்டு உள்ளார். இன்னொருவர் "மற்றவர்களும் இந்த சாதனையை வெல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறியுள்ளார். மேலும் பலர் 'மிக சிறப்பான சாகசம்' 'அற்புதமான சாதனை' என்று கமெண்ட் செய்து உள்ளனர்.
அத்துடன் ரோமனின் இந்த சாதனைக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். ரோமன் சஹ்ரத்யன் ஆர்மீனியா நாட்டை சேர்ந்தவர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பின் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. அக்டோபர் 2, 2021 அன்று ரோமன் இந்த சாதனையை செய்து முடித்தார். 44 நாள் ஆர்ட்சாக் போரில் போராடிய வீரர்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். மாறும் இது போன்ற பல சாதனைகளையும் ரோமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.