Home /News /trend /

அந்த மனசு தான் சார் கடவுள்.. நாயை காப்பாற்ற திருமண கொண்டாட்டத்தை தூக்கிப்போட்ட நபர் - வைரல் வீடியோ!

அந்த மனசு தான் சார் கடவுள்.. நாயை காப்பாற்ற திருமண கொண்டாட்டத்தை தூக்கிப்போட்ட நபர் - வைரல் வீடியோ!

Viral Video

Viral Video

Dog Rescue Viral Video | சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றில் சிக்கி தவிக்கும் ஒரு நாயை மீட்கும் முனைப்பின் கீழ் ஒரு நபர் திருமண கொண்டாட்டத்தில் இருந்து தன்னை விளக்கி கொண்டதும், செலெப்ரேஷன் மூட்-ஐ புறக்கணித்து விட்டு அந்த நாயை மீட்க அவர் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
மனிதனுக்கும் நாய்களுக்கும் இடையே உள்ள பாசம் மற்றும் பிணைப்பை சுட்டிக்காட்ட ஒரு கதை அல்ல ஓராயிரம் கதைகள் உள்ளன. அதில் ஆகச்சிறந்த ஒரு கதையாக 'ஹச்சிகோ' என்கிற நாயின் கதையை கூறலாம். ஹச்சிகோ (Hachikō) என்பது ஒரு ஜப்பானிய அகிடா நாய் ஆகும்.

ஈசபுரோ ஈனோ என்கிற ஒரு ஜப்பானிய பேராசிரியரின் செல்ல நாயான ஹச்சிகோ, தனது உரிமையாளரை தினமும் ரயில் நிலையம் வரை சென்று வழி அனுப்புவதையும், பிறகு அவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அதே ரயில் நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது. சரியாக மே 21, 1925 இல், ஹச்சிகோ வழக்கம் போல டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்தில் தனது உரிமையாளருக்காக காத்திருந்தது. ஆனால் அவர் வரவே இல்லை.

ஏனெனில் அவர் பெருமூளை இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டு, வேலையில் இருந்தபோதே திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்து போனார். அதன் பிறகு ஹச்சிகோ என்ன செய்தது தெரியுமா? தன் வாழ்நாளின் அடுத்த 9 ஆண்டுகள், அதே ரயில் நிலையத்தில் தன் உரிமையாளருக்காக காத்திருந்தது. அதாவது பேராசிரியர், சரியாக ரயில் நிலையத்திற்குள் நுழைய வேண்டிய நேரம் மற்றும் அவர் வெளியே வரும் நேரத்தில் ஷிபுயா ரயில் நிலையத்திற்கு சென்று அவருக்காக காத்திருக்கும் பழக்கத்தை ஹச்சிக்கோ மாற்றிக்கொள்ளவே இல்லை, சாகும் வரை!

Hachikō Dog


எனவே தான் இந்நாள் வரையிலாக, ஹச்சிகோ ஜப்பானிய கலாச்சாரத்தில் விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இப்படியாக மனிதர்களும் நாய்களும் அன்பை பகிர்ந்துகொள்ள வெறுமனே (நாய்கள் மற்றும் மனிதர்களுக்குள் சுரக்கும்) ஆக்ஸிடாஸின் ஹார்மோன்கள் மட்டும் காரணமாகி விடாது. அதற்கும் மேலொரு சக்தி உள்ளது. அந்த சக்தி எந்த எல்லைக்கும் செல்லும். அதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ:சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றில் சிக்கி தவிக்கும் ஒரு நாயை மீட்கும் முனைப்பின் கீழ் ஒரு நபர் திருமண கொண்டாட்டத்தில் இருந்து தன்னை விளக்கி கொண்டதும், செலெப்ரேஷன் மூட்-ஐ புறக்கணித்து விட்டு, தான் அணிந்திருந்த கோட்-ஐயும் கழட்டி போட்டுவிட்டு, அந்த நாயை மீட்க அவர் போராடியதும் 'அனிமல் லவர்ஸ்' மத்தியில் அவரை ஒரு ஹீரோ ஆக்கியுள்ளது.

Also Read : கொஞ்சம் தள்ளிப்படுங்க அண்ணே, நானும் தூங்கணும் - பாகனுடன் விளையாடி மகிழும் குட்டி யானை

மூன்று நிமிடங்கள் நீளும் இது குறித்த வீடியோவில், நிரம்பி வழியும் ஒரு ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள கான்கிரீட் தளத்தில் ஒரு நாய் சிக்கிக்கொண்டு நிற்பதை காண முடிகிறது. அதை கோட்-சூட் அணிந்த ஒரு நபர் கண்டுகொள்கிறார். உடனே தன் கோட்டை கழட்டி போட்டுவிட்டு அந்த நாயை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். தன்னால் முடிந்த எல்லைக்கு சென்று ஆபத்தின் விளிம்பில் நிற்கும் அந்த நாயை காப்பாற்ற முயல்கிறார். ஆனால் தனிநபராக, அவரால் அந்த நாயை கைப்பற்ற முடியவில்லை. பிறகு அவருக்கு உதிவியாக ஒரு நபர் இந்த 'ரெஸ்க்யூ' பணியில் இணைய ஒருவழியாக அந்த நாய் காப்பாற்றப்படுகிறது.

Also Read : ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிக்ட் ஆன கொரில்லா குரங்கு

காப்பாற்றப்பட்ட நாய் தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலாட்டிக்கொண்டே அவரின் பின்னாலேயே செல்வதையும் வெளியான வீடியோவில் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, என்ன தோன்றுகிறது தெரியுமா? ஹச்சிகோ இறந்து போகவில்லை! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நாய்குள்ளும் இன்னமும் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறது!
Published by:Selvi M
First published:

Tags: Dog, Trending, Viral Video

அடுத்த செய்தி