Home /News /trend /

உடலுறவின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காதலன் - மருத்துவர் சொல்லும் காரணம்

உடலுறவின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காதலன் - மருத்துவர் சொல்லும் காரணம்

மாதிரி படம்

மாதிரி படம்

பொதுவாக உடலுறவில் அதீத நாட்டம் உடைய சிலர், உறவுக்கு முன்பாக ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்வது உண்டு.

    மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் 28 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் உடலுறவு கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த இளைஞரின் பெயர் அஜஸ் பர்தேகி ஆகும். இவர் டிரைவராகவும், எலெக்ட்ரீசியனாகவும் பணியாற்றி வந்தார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இந்த இளைஞர், மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்திவாரா பகுதியில் செவிலியராக பணியாற்றி வரும் 23 வயதான பெண்ணை காதலித்து வந்தார்.

    சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒருவருக்கு, ஒருவர் அறிமுகமாகி காதலித்து வந்தனர் இந்த இளம் ஜோடிகள். இவர்களது காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்ட நிலையில், வெகு விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, தன் காதலியை சந்திக்க விரும்பிய அஜய், அவரை நாக்பூருக்கு வரவழைத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சயோனர் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் இவர்கள் அறை எடுத்து தங்கினார். மாலை 4 மணியளவில் இவர்கள் ஹோட்டல் அறைக்குள் சென்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் பதறியடித்து ஓடி வந்த அஜயின் காதலி, அவர் மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் அஜயை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.

    காய்கறிகளை பயன்படுத்தி ஆணுறைகள் தயாரிப்பு... புது முயற்சிக்கு அதிக வரவேற்பு...

    போலீஸார் விசாரணை : இளம்பெண்ணுடன் தங்கியிருந்த இளைஞர் திடீரென்று உயிரிழந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அஜயின் காதலியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில் அஜய் மயங்கி விழுந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த சில நாட்களாகவே அஜய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது குடும்பத்தினர், காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

    மருந்துகள் எதுவும் காரணமா? பொதுவாக உடலுறவில் அதீத நாட்டம் உடைய சிலர், உறவுக்கு முன்பாக ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்வது உண்டு. அதுபோன்ற மருந்துகள் சமயத்தில் இதய துடிப்பை அதிகப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், அஜய் மரணம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “அஜய் மருந்து எதுவும் உட்கொண்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை. அவருடைய பாக்கெட்டில் மாத்திரை கவர் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

    மருத்துவர்கள் கூறும் விளக்கம் : உடலுறவில் ஈடுபடும் எல்லோருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு விடாது. இது மிகவும் அரிதான விஷயம். உடலுறவின் போது இதயத்திற்கு மிக அதிகமான ஆக்ஸிஜனும், ரத்த ஓட்டமும் தேவைப்படும். ஆனால், யாருக்கேனும் நீண்டகாலமாக இதய குழாய்களில் அடைப்பு மற்றும் இதர நோய்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். சில சமயம் மரணமும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி