Home /News /trend /

நீச்சல் குளத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளம் - ஒருவர் உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளம் - ஒருவர் உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட அமிழ்துளை

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட அமிழ்துளை

தனி வில்லாவில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது திடீரென நீச்சல் குளத்தில் ஏற்பட்ட அமிழ்துளையில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

  • Last Updated :
    இஸ்ரேல் நாட்டின் தென்கிழக்கு டெல் அவிவ் பகுதியில் உள்ள கர்மி யோசப் என்ற பகுதியில் உள்ள தனி வில்லாவில் தனியார் நிறுவனத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊழியர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தபோது திடீரென பூமியில் ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டு அப்படியே நீரை இழுத்துக்கொண்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு பேர் அதனின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு ஒருவரைக் காயத்துடனும், மேலும் நான்கு மணி நேரம் போராடி 43 அடி ஆழத்தில் இன்னொருவரை உயிரிழந்த நிலையிலும் மீட்டனர்.

     



    இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர் அந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர் 32 வயதான கிளில் கிம்ஹி என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட இன்னொரு நபர் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.

     



    இந்த சம்பவம் தொடர்பான அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில், நீச்சல் குளத்தில் ஏற்பட்ட துளையில் நீர்க் கீழே செல்வதைப் பார்க்கமுடிகிறது. மேலும் நின்று கொண்டிருந்த ஒருவர் குழியில் விழச் சற்றே தப்பியதும் தெரிகிறது.

    மேலும், அந்த நீச்சல் குளத்தில் மிதந்த பொம்மைகள் அந்த பள்ளத்திற்குள் செல்கின்றன. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கொண்டாட்டத்திற்காகச் சென்ற இடத்தில் நடத்தச் சம்பவம் அங்கு வந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Party

    அடுத்த செய்தி