நீராருங் கடலுடுத்த பாடல் மூலம் ட்ரெண்டான டிக்டாக் தமிழன்!

நீராருங் கடலுடுத்த பாடல் மூலம் ட்ரெண்டான டிக்டாக் தமிழன்!
டிக்டாக் தமிழன்
  • Share this:
டிக்டாக்-ல் "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் பாடலுக்கு கலைநயத்தோடு நடனமாடிய நடன கலைஞர் ஒருவர் இணையத்தில் அதிக பாராட்டுகளை பெற்று வருகின்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.

Also see...எவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...!


தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும்.

இந்த பாடலை நடன ஆசிரியர் ஒருவர், கலைநயத்தோடு பிறருக்கு சென்று சேரும் வகையில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ டிக்டாக்கில் அதிக பாராட்டுகளை பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Also see...ஹலோ ஆண்டாளு சாப்டியா ? மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி!தமிழ் தாய் வாழ்த்து ஆசிரியர் எவ்வளவு கலைநயத்தோடு சொல்கிறார் பாருங்கள் என இணையத்தில் பாராட்டுகளை குவித்து வருகின்றார்.Also see...தாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading