மனநலம் பாதித்த இளைஞர் வயிற்றிலிருந்த 4 கிலோ இரும்புப் பொருள்கள் நீக்கம்!

மருத்துவமனையில் சிலர் அவரை இரும்புகளைக் கொடுத்து விழுங்கச் சொல்லியிருக்கலாம்.

news18
Updated: August 14, 2019, 8:34 PM IST
மனநலம் பாதித்த இளைஞர் வயிற்றிலிருந்த 4 கிலோ இரும்புப் பொருள்கள் நீக்கம்!
452 பொருட்களை அறுவை சிகிச்சையின் போது வயிற்றிலிருந்து எடுத்த மருத்துவர்கள்
news18
Updated: August 14, 2019, 8:34 PM IST
அகமதாபாத்தில் வயிற்று வலி என வந்த நபருக்கு அறுவைச் சிகிச்சை செய்ததில் 4 கிலோ எடைக் கொண்ட 452 இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இதேபோல் வட மாநிலத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து ஒன்றறைக் கிலோ தங்க ஆபரணங்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை அதிர்ச்சி மக்களை வியக்க வைத்துள்ளது.

28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் வயிற்று வலியால் துடித்துள்ளார். பின் காரணத்தை அறிய ஸ்கேன் செய்து பார்த்ததில் இரும்புப் பொருட்கள் உள்ளே இருப்பதைப் போல் தெரிந்துள்ளது. உடனே அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அறுவைச் சிகிச்சையில் நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையில் நான்கு கிலோ மதிப்பு கொண்ட 452 இரும்புப் பொருட்கள் இருந்துள்ளன. அதுவே அவரின் வயிற்று வலிக்குக் காரணமாக இருந்துள்ளன.அதில் ஊக்கு, மோதிரம், நக வெட்டி , நாணயங்கள் என நினைத்துப்பார்க்காத அளவிலான இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பின் வெற்றிகரமாக பொருட்களை அப்புறப்படுத்து அறுவைச் சிகிச்சையை சிறப்பாக முடித்துள்ளனர்.

இப்படி அவர் இரும்புப் பொருட்களை விழுங்குவது அவரின் மன நல மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கே தெரியாமல் இருந்துள்ளது. இதற்குக் காரணம் அந்த மருத்துவமனையில் சிலர் அவரை இரும்புகளைக் கொடுத்து விழுங்கச் சொல்லியிருக்கலாம் அல்லது உணவு என நினைத்து தினமும் இரும்புகளை விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பார்க்க : பணம் தராத தொண்டருடன் ஃபோட்டோ எடுக்க வைகோ மறுப்பு

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...