Home /News /trend /

6 மாதங்களுக்கு பிறகு நோயாளியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ‘மொபைல் போன்’ - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

6 மாதங்களுக்கு பிறகு நோயாளியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ‘மொபைல் போன்’ - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

6 மாதங்களுக்கு பிறகு நோயாளியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ‘மொபைல் போன்’

6 மாதங்களுக்கு பிறகு நோயாளியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ‘மொபைல் போன்’

எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

வயிற்று வலி காரணமாக பாதிக்கப்பட்டவர் வயிற்றில் இருந்து மொபைல்போன் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது வயிற்றில் வலி ஏற்படுவதாக நபர் ஒருவர் அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் மொபைல் போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு, வயிற்றில் உள்ள மொபைல் போனை தனியாக எடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், ‘பாதிக்கப்பட்ட அந்த நபர் இயற்கையாகவே மொபைல் போன் தனது உடலில் இருந்து வெளியேறும் என்று நம்பினார். பல முயற்சிகள் செய்து பார்த்தும் ஒன்றும் வரவில்லை. கடும் வயிற்று வலி ஏற்பட்ட பிறகே அந்த நபர் எங்களின் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை சோதித்த போது தான் மொபைல் போன் அவரது வயிற்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறு மாத காலமாக மொபைல் போன் வயிற்றில் இருந்ததால் கடும் வயிற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் மருத்துவமனைக்கு வந்தார். இல்லையென்றால் வந்திருக்கமாட்டார் என்று நினைக்கிறோம். இதனை தொடர்ந்து வயிற்றில் இருந்த போனை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளோம். மேலும் குடலில் அந்த நபருக்கு அதிகப்படியான தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. பிறகு அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு தற்போது அந்த நபர் நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

Also read... ஆன்லைன் வகுப்பில் போன் வெடித்து சிறுவன் உயிரிழப்பு - வியட்நாமில் நிகழ்ந்த சோகம்!

அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஷ்ரப் மாபாத் இதுகுறித்து பேசிய போது, ‘ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நோயாளி விழுங்கிய மொபைல் போன் கருவியானது அவர் சாப்பிடும் உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாளடைவில் வயிற்றில் தொற்று ஏற்பட காரணமாக அமைந்தது.மருத்துவர்களின் சரியான சிகிச்சை மூலம் தற்போது அந்த நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார்; என்று அவர் கூறினார்.

இதேபோல, லிதுவேனியாவில் ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றை சோதனை செய்த மருத்துவர்கள் அந்த நோயாளியின் வயிற்றில் 1 கிலோ எடையுள்ள நகங்கள், ஸ்க்ரூ போன்ற திருகாணிகள், ஆணிகள் போன்றவை இருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இவற்றை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய மருத்துவர்கள், ஸ்க்ரூ, ஆணிகள் எப்படி வயிற்றை கிழிக்காமல் இருந்தது என ஆச்சரியப்பட்டனர். இதே போல ஊசிகள்,நாணயங்கள்,முடிகள் போன்றவைகளை தெரிந்தோ தெரியாமலோ பலர் உலகம் முழுவதும் விழுங்குகின்றனர். இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Egypt, Mobile phone

அடுத்த செய்தி