டிக்கெட் எடுக்காததால் நகரும் பேருந்தில் இருந்து குதித்த நபர் - உக்ரைனில் அதிர்ச்சி சம்பவம்!

நகரும் பேருந்தில் இருந்து குதித்த நபர்

பேருந்தில் டிக்கெட் எடுக்காததால் டிக்கெட் பரிசோதனை செய்யும் நபரை பார்த்த உடன் தப்பிச் சென்ற இளைஞரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவும் சில வீடியோக்கள் நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்படுகிறது. சில நேரங்களில், மக்கள் உச்சநிலைக்கு சென்று கற்பனை செய்ய முடியாத காரியங்களை செய்வதும் வீடியோ எடுத்து ஷேர் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில், உக்ரைனின் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து ஒரு நபர் குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பேஸ்புக் யூசர் தாராஸ் குவில் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நபர் பொது போக்குவரத்து பேருந்தில் பயணிப்பதை வீடியோ காட்டுகிறது. அவர் நீல டெனிம் ஜீன்ஸ் மற்றும் ஒரு கருப்பு ஜாக்கெட் மற்றும் ஒரு நியான் டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். கையில் ஒரு பையும் வைத்திருந்தார்.

ALSO READ : 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் குழந்தை - ஹெலிகாப்டரில் வரவேற்பளித்த குடும்பம்!

பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும் போது டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரி பேருந்தில் ஏறுகிறார். அப்போது அவர் நெருங்கி வருவதைக் கண்ட பயணம் செய்த நபர், பேருந்தின் திறந்த சிறிய ஜன்னலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஜன்னல் மிகவும் சிறியதாக இருந்தது, அதிலிருந்து தப்பித்து விடலாம் என ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் அந்த நபர் புத்திசாலித்தனமாக தனது உடலை வளைத்து, காயமடையாமல் வெளியே ஜன்னலிலிருந்து குதிக்கிறார். இதனை தொடந்து அவர் வைத்திருந்த தனது பையையும் முயற்சி செய்து இழுத்துவிட்டு ஓடிவிடுகிறார்.

இவை அனைத்தும் பேருந்து கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் பேருந்தில் டிக்கெட் எடுக்காததால் தான் அவர் டிக்கெட் பரிசோதனை செய்யும் நபரை பார்த்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவத்தை பகிர்ந்த தாராஸ், முழு சம்பவத்தையும் தனது கேமராவில் படம்பிடித்து, “காவல்துறையினர் வருவதற்கு முன்பே சட்டத்தை மீறுபவர்கள் ஓடிப்போகிறார்கள்” என்ற தலைப்பில் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

ALSO READ : செடிகளுடன் கூடிய கண்ணாடி மாஸ்க்கோடு வீதியில் உலாவும் பெல்ஜிய கலைஞர் - வீடியோ

 

  

இந்த சம்பவம் உக்ரைனின் செர்கஸி ஒப்லாஸ்ட் நகரில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். டிக்கெட் இல்லாத பயணிகளிடம் டிக்கெட்டைக் காட்டும்படி கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் டிக்கெட்டுக்கு பணம் செலுத்த முடியாதபோது, ​​அவர் வெளியே குதித்து தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது. சிலர் அந்த நபருக்கு ஆதவாகவும் கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: