130 கி.மீ வேகத்தில் ரோலர்கோஸ்ட்; தவறி விழுந்த போனை பிடித்து அசத்திய இளைஞர்! வைரல் வீடியோ

ஃபிஸ்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கெம்ஃப் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது குடும்பத்தினர் போர்ட் அவென்டுரா தீம் பார்க்குக்கு சென்றுள்ளார்.

130 கி.மீ வேகத்தில் ரோலர்கோஸ்ட்; தவறி விழுந்த போனை பிடித்து அசத்திய இளைஞர்! வைரல் வீடியோ
ரோலர் கோஸ்ட்
  • News18
  • Last Updated: September 9, 2019, 6:22 PM IST
  • Share this:
ஸ்பெயினில் ரோலர்கோஸ்டில் 130 கி.மீ வேகத்தில் சென்ற இளைஞர் எதிர் பாராதவிதமாக தவறி விழுந்த மொபைல் போனை ஒற்றைக் கையால் பிடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிவருகிறது.

உலகில் நம்மால் நம்ப முடியாத சம்பவங்கள் பல அவ்வப்போது நடைபெறும். அதில், சில சம்பவங்கள் கேமராவின் கண்களில் சிக்கும் அரிய நிகழ்வுகள் நடைபெறும். அப்படி, ஒரு சம்பவம் ஸ்பெயினில் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்தவர் சாமுவேல் கெம்ஃப், ஸ்பெயினில் மிகவேகமாக செல்லும் ரோலர் கோஸ்டில் சென்றுள்ளார்.

இதுகுறித்து மெட்ரோ ஊடகத்தில் வெளியான செய்தியின்படி, ‘ஃபிஸ்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கெம்ஃப் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது குடும்பத்தினர் போர்ட் அவென்டுரா தீம் பார்க்குக்கு சென்றுள்ளார். அவர், ரோலர்கோஸ்டில் 130 கி.மீ வேகத்தில் செல்லும் அவருக்கு முந்தைய இருக்கையில் இருந்தவரின் மொபைல்போன் தவறி விழுந்துள்ளது.
சட்டென்று அதைக் கவனித்த கெம்ஃப் அதனை கேட்ச் பிடித்தார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. வெறும், 600 சப்ஸ்கிரைபர்கள் மட்டும் கொண்ட அந்த யூட்யூப் சேனலில் இந்த வீடியோவை 51 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

Also see:
First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்