பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைதளத்தில் பார்த்து இருப்போம். பாம்பு பிடிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அதில் சிறப்பாக செயல்பட முடியும். சற்று தவறினாலும் அது உயிருக்கே ஆபத்தாகி விடும். சில சமயங்களில் எப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த பாம்பு பிடிப்பவர்களும் பாம்பு கடியில் சிக்கி மரணமடைந்த செய்திகளையும் நாம் கேட்டிருப்போம்.
அப்படிப்பட்ட பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் பல இணயைத்தை ஆக்கரமித்து இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அதுப்போன்ற ஒரு வீடியோ தான் தற்போது பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. பெரிய சைஸ் பாம்புகளை வெறும் கைகளால் பிடிப்பதற்கே பலர் பயப்படும் நிலையில் ஒருவர் பெரிய பாம்பை தண்ணீர் ஊற்றி தேய்த்து குளிப்பாட்டி விடும் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவில் வரும் நபர் பெரிய சைஸ் பாம்பு ஒன்றை பாத்ரூமில் வைத்து கப்பில் தண்ணீர் எடுத்து ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார். வீடுகளில் குழந்தைகளை குளிக்க வைப்பது போல் பாம்பை அவர் சர்வ சாதரணமாக குளிப்பாட்டி விடுகிறார். அந்த பாம்பும் அவர் செயலுக்கு எந்த எதிர்வினை ஆற்றாமல் உள்ளது. ஆனால் ஒரு கப்பை மட்டும் கடிக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த வீடியோவிற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேல் லைக்ஸ்கள் குவிந்துள்ளன. பலரும் பலவிதமான கருத்துகளை அள்ளி தெளித்து விடுகின்றனர். ஒரு பயனாளர் என்ன ப்ரோ வீட்ல இருக்க சொந்தகாரங்கள குளிக்க வைக்கிற மாதிரி அசால்ட் பண்ணீறிங்க என்றுள்ளார். மற்றொருவர் நான் பார்ப்பதை என்னால் நம்பவே முடியவேவில்லை. உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தை இல்லை என்றும் தெரவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.