ஜெர்ரி என் அறையில் உள்ளது; டாமைக் கொண்டுவர முடியுமா? ட்விட்டரைக் கலக்கும் வைரல் வீடியோ !

அரபு நாட்டை சேர்ந்த ஒருவர் இது வரைக்கும் டாம்& ஜெர்ரி கார்ட்டூனில் தான் எலியை பார்த்திருப்பார் போலும். இணையத்தில் தற்போதைய ட்ரெண்டிங் அவர் தான்

ஜெர்ரி என் அறையில் உள்ளது; டாமைக் கொண்டுவர முடியுமா? ட்விட்டரைக் கலக்கும் வைரல் வீடியோ !
tom
  • Share this:
அரபு நாட்டை சேர்ந்த ஒருவர் தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் எலி புகுந்து விட்டதை ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்கும் உரையாடல் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

அரபு நாட்டில் இருந்து லண்டனுக்கு சென்று ஒருவர் அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். தான் தங்கியிருந்த அறைக்குள் எலி ஒன்று புகுந்து விட்டது. மனுஷன் இது வரைக்கும் டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் தான் எலியை பார்த்திருப்பார் போலும். உடனே வரவேற்பறைக்கு தொடர்பு கொண்டு எலியை விரட்ட கூறியுள்ளார்.

அவருக்கு ஆங்கிலம் சரிவர தெரியாதென்பதால் புரிய வைக்க முயற்சி செய்த விதம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசும் போது "Do you know Tom and Jerry?" 'Jerry in my room!' "Please bring Tom with you என கூறிய வார்த்தைகளை நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

This Arab guy calls the hotel reception to complain about a mouse in his room. Listen to how he describes the situation 💀💀💀😂😂😂 pic.twitter.com/feObtAj9Bp


Also Read : பாய்ச்சல்ல சிங்கம்...குணத்துல தங்கம்... மக்கள் மனதை வென்ற காளை...! - வீடியோ
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்