Home /News /trend /

ஆறு ரூபாய் லாட்டரியில் ஒரு கோடி வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்!

ஆறு ரூபாய் லாட்டரியில் ஒரு கோடி வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்!

மாதிரி படம்

மாதிரி படம்

லாட்டரியில் வென்ற பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சில திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

லாட்டரி சீட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. அவ்வப்போது லாட்டரியில் லட்சங்கள் வென்றவர், கோடிகள் வென்றார் என்ற செய்திகளை கேட்டிருப்பீர்கள். மேற்கு வங்காளத்தின் ஜாய் நகரைச் சேர்ந்தவர் பிரபீர் பிரமாணிக். பல காலமாக லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. ஆனால், லாட்டரி சீட்டு ஒரே நாளில் இவரை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

61 வயதான பிரபீர் பிரமாணிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது ஜாய்நகர் பஸ் டிராக்கர் அமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கிறார். பல காலமாக லாட்டரி வாங்கும் கொண்டுள்ளார். ஆனால், இதுவரை ஒரு ருபாய் கூட வென்றதில்லை. இருப்பினும், லாட்டரி சீட்டுகளை வாங்குவதை நிறுத்தவே இல்லை.

எவ்வளவு முயற்சி செய்தாலும், நிறுத்த மடியாமல் தொடர்ந்து லாட்டரி வாங்குவது கிட்டத்தட்ட ஒரு அடிக்ஷன் ஆகவே மாறியுள்ளதாக தெரிவித்திருந்தார். குடும்பத்தாரிடம் இருந்து பல வகையில் தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையிலும் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தைக் கைவிடவில்லை. காரணம், பல ஆண்டு காலத்துக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டவர் கணிசமான தொகையை நிச்சயமாக இழந்திருப்பார். ஆனால், சமீபத்தில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய சீட்டு மூலம் இவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.

ஒரு கோடி ரூபாய் வென்ற பிரபீர் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார். இதைப்பற்றி தனது குடும்பத்தினருக்கு தெரிவித்த போது, அவர்களால் நம்ப முடியவில்லை. குடும்பத்தில் இன்னும் சிலர் பிரபீர் பொய் சொல்கிறாரோ என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

லாட்டரியில் வென்ற பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சில திட்டங்களை மேற்கொண்டுள்ளார். பணம் கிடைத்தவுடன் முதலில் தனக்கு இருக்கும் கடன் முழுவதையும் அடைக்க வேண்டும் என்று கூரியுள்ளதாக தகவல். அதே போல, வீட்டை சீர்செய்ய வேண்டும், பல பழுது பார்க்கும் வேலைகள் நீண்டகாலமாக அப்படியே உள்ளது. மற்றும் முழுமையாக கட்டப்படாமல் இருக்கும் பகுதிகளைக் கட்ட வேண்டும். அதனால் வீட்டுக்காக ஒரு கணிசமான தகையை ஒதுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also read... 15 பொது அறிவு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் இவர் ஆட்டோவில் இலவச பயணம்

பிறகு, வீட்டுக்கு கான்கிரீட் தளத்தில் அல்லது உறுதியான மேட்டீரியல்கள் வைத்து ‘புக்கா’ எனப்படும் மேற்கூரை எழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். மீதமுள்ள பணத்தில் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளார். இவர் தன் மனைவி, இரண்டு சகோதரர்களுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற செய்தி அக்கம்பக்கத்தில் பரவத் தொடங்கியுள்ளது. எனவே, பணம் திருடு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், காவல் துறையிடம் பாதுகாப்பு வழங்க கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lottery

அடுத்த செய்தி