ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விமான நிலையத்தில் திக்குமுக்காடிய வயதான தம்பதியர் - உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.!

விமான நிலையத்தில் திக்குமுக்காடிய வயதான தம்பதியர் - உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Trending | வயதான தம்பதியரை அண்மையில் விமான நிலையத்தில் பார்த்தபோது அவர்களுக்கு சரியான முறையில் உதவி செய்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் ஒருவர் பகிர்ந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

சாதாரணமாக பேருந்து நிலையத்திற்கு அல்லது ரயில் நிலையத்திற்கு செல்லும்போது அங்கு முதியவர்கள் சிலர் தடுமாறிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். தங்களுக்கான பேருந்து அல்லது ரயில் எங்கு நிற்கிறது என்று அருகில் உள்ள நபர்களிடம் அவர்கள் விசாரித்துக் கொண்டிருப்பார்கள்.

இவ்வளவு ஏன், நாமே புதிதாக வேறொரு ஊருக்கு சென்றால் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்யும். குறிப்பாக, முதல்முறையாக விமான பயணம் செல்பவர் என்றால் குழப்பங்களுக்கும், தடுமாற்றத்திற்கும் குறைவிருக்காது. அதிலும் பெரிய அளவுக்கு விவரம் தெரியாத பாமர மக்கள் என்றால் இன்னும் சிரமம்தான். அப்படியொரு வயதான தம்பதியரை அண்மையில் விமான நிலையத்தில் பார்த்தபோது அவர்களுக்கு சரியான முறையில் உதவி செய்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அமிதாப் ஷா என்பவர் லிங்க்டு இன் தளத்தில் பதிவு செய்துள்ள இந்த உண்மை கதை இப்போது வைரல் ஆகி வருகிறது. இவர் அண்மையில் டெல்லியில் இருந்து கான்பூருக்கு விமான பயணம் மேற்கொள்ள இருந்தார். அப்போது உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்திருந்த வயதான தம்பதியர் விமான நிலையத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதை பார்த்தார். அவர்களும் டெல்லியில் இருந்து கான்பூர் செல்வதற்காக வந்திருந்தனர். டெல்லி விமான நிலையத்திற்கு சுமார் 8 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து வந்திருந்ததால் மிகுந்த களைப்புடன் தென்பட்டனர்.

அமிதாப் ஷாவை அவர்கள் விமான நிலைய பணியாளர் என்று நினைத்துக் கொண்டார்களாம். செய்வதறியாது திகைத்து நின்ற அந்த தம்பதியர், தான் செல்லும் அதே விமானத்தில் பயணம் செய்ய இருப்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தார் அமிதாப் ஷா. குறிப்பாக விமானத்தில் இவருக்கு அருகில் உள்ள இருக்கைகளில் அந்த தம்பதியர் வந்து அமர்ந்துள்ளனர். அப்போது தங்களை படம் பிடித்து தங்கள் மகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அமிதாப் ஷா படம்பிடித்து அனுப்பியுள்ளார்.

Also Read : வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை.. ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்

சற்று நேரத்தில் விமான பணிப்பெண் வந்து சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, வயதான தம்பதியர் எதுவும் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டனர். விமானங்களில் உணவு பொருட்கள் அதிக விலை கொண்டதாக இருக்கும் என்றெண்ணி அவர்கள் மறுத்ததாக தெரிகிறது. ஆனால், அவர்களது முகத்தில் பசி, தாகம் மற்றும் களைப்பு தென்பட்டிருக்கிறது.

இதைப் பார்த்த அமிதாப் ஷா, பணிப்பெண்ணை அழைத்து அவர்களுக்கு சாண்ட்விச் மற்றும் ஜூஸ் கொடுக்குமாறும், விமானத்தில் பயணிக்கின்ற அதிர்ஷ்டசாலி பயணிகளான உங்களுக்கு இது முற்றிலும் இலவசம் என்று சொல்லுமாறும் அறிவுறுத்தினார். மேலும், அதற்கான பணத்தையும் வழங்கினார். பணிப்பெண்ணும் அவர் சொன்னபடியே செய்துவிட்டார்.

Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்.. காரணம் என்ன.?

இறுதியாக பயணம் முடிந்து அவரவர் திசைகளில் பிரிந்து விட்டனர். அமிதாப் ஷாவின் இந்த நற்செயலை சமூக வலைதள பயனாளர்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். அவரது பதிவுக்கு சுமார் 25 ஆயிரம் லைக்ஸ் கிடைத்திருக்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Delhi Airport, Tamil News, Trending