திருட வந்த இடத்தில் மது குடித்துவிட்டு போதையில் திருடன் செய்த செயல்..

திருட வந்த இடத்தில் மது குடித்துவிட்டு போதையில் திருடன் செய்த செயல்..
  • Share this:
மும்பையில் தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்த திருடன் புத்திமாறி மது குடித்துவிட்டு மட்டையானதால் போலீசில் சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .

இது தொடர்பாக மும்பை மிரர் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையில் கிரிகுஞ்ச் அப்பார்ட்மென்டில் சொந்தமாக பிளாட் வைத்திருப்பவர் சித்தாந்த் சபூவு. அவர் அதே அப்பார்ட்மென்டின் 2வது மாடியில் மற்றொரு பிளாட்டை வாங்கியுள்ளார். தனது புதிய பிளாட்டிற்கு வீட்டிலிருக்கும் பாதி பொருட்களை மாற்றியுள்ளார்.

ஆட்கள் இல்லாத புதிய பிளாட்டில் விலை உயர்ந்த பொருட்களை திருட திருடன் ஒருவன் திட்டமிட்டுள்ளான். இதையடுத்து பால்கனி வழியாக உள்ளே நுழைந்த திருடன், அங்கிருந்த 2 ஷாம்பெயின் பாட்டில்களை குடித்து உள்ளான். இதனால் போதை தலைக்கேற அங்கேயே தங்கிவிட்டான்.


Also Read : யுனெஸ்கோவால் புராதன இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் ஆபாசப்பட ஷூட்டிங்...!
 ஆள் இல்லாத புதுபிளாட்டில் லைட் எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சித்தாந்த் சபூவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சபூவு கதவை திறந்து பார்த்த போது கொள்ளையன் அவரது படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சபூவை எழுப்பி உள்ளனர். போதையில் இருந்து தெளிந்த கொள்ளையன் போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியில் நின்றுள்ளான். அவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Also Read : வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!


First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading