முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / போக்குவரத்து நெரிசலால் 2 மணி நேரம் காத்திருந்து கடுப்பான இளைஞர் செய்த விபரீத செயல்!

போக்குவரத்து நெரிசலால் 2 மணி நேரம் காத்திருந்து கடுப்பான இளைஞர் செய்த விபரீத செயல்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சுமார் 2 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் பொறுமையை இழந்த ஜிம்மி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென காரில் இருந்து இறங்கி ஓடி வந்து பாலத்தின் மீதில் இருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கித் தவித்த இளைஞர் ஒருவர், கடுப்பாகி திடீரென ஆற்றுப் பாலத்தில் இருந்து முதலைகள் நிரம்பியிருக்கும் ஆற்றில் குதித்து நீந்தியதால் அருகாமையில் இருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

போக்குவரத்து நெரிசல் என்பது தற்போதெல்லாம் சகஜமாகிவிட்ட ஒன்று தான் என்றாலும், வாகன நெரிசலில் சிக்கி நகர்வதற்காக காத்திருப்பதில் இருக்கும் கஷ்டம், அதை தினந்தோறும் அனுபவிப்பவர்களுக்கே புரியும். அதிலும் அவசரமாக எங்கேனும் செல்கையில் இது போன்ற நெரிசல்கள் நம் பொறுமையை அசைத்து பார்த்து விடும்.

அது போல பொறுமையை இழந்த நபர் ஒருவர் திடீரென தனது வாகனத்தில் இருந்து இறங்கி ஆற்றில் குதித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read:  வாக்கு வங்கிக்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்கின்றனர்: இயக்குனர் கேந்திரன் முனியசாமி விமர்சனம்!

அமெரிக்காவின் லூசியாணா பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி இவன் ஜென்னிங்ஸ் என்ற 26 வயது இளைஞர். இவர் காரில் பயணமாகிக் கொண்டிருந்த போது, முன்னே சென்ற ட்ரக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனது. இதன் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமுடியாமல் இருந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலால் ஆற்றுப்பாலம் ஒன்றின் மீது காரிலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. நேரம் செல்ல செல்ல இளைஞர் ஜிம்மி மிகவும் விரக்தி அடைந்திருக்கிறார். சுமார் 2 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் பொறுமையை இழந்த ஜிம்மி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென காரில் இருந்து இறங்கி ஓடி வந்து பாலத்தின் மீதில் இருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

Also read:  ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

பாலத்துக்கும் ஆற்றுக்குமே சுமார் 100 அடி உயரம் இருக்கும் நிலையில் அந்த ஆற்றுக்குள் முதலைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில் ஜிம்மி திடீரென ஆற்றில் குதித்ததை பார்த்த அருகில் இருந்தோர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதனிடையே ஆற்றில் குதித்த ஜிம்மி சுமார் 3 மணி நேரம் கழித்து அருகில் உள்ள தீவு ஒன்றில் கரை சேர்ந்தார். அவரை கிரிமினல் அத்துமீறல் காரணங்களுக்காக போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து ஜிம்மி பின்னர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார், அதில் அந்த ஆற்றில் முதலைகள் இருக்கும் என எனக்கு தெரியாது. அதிக உயரத்தில் இருந்து குதித்ததால் எனது இடது கையில் காயம் ஏற்பட்டது. என்னால் நீந்த முடியவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் எனது இடது கையை பயன்படுத்த முடியவில்லை. எப்போதெல்லாம் ஆற்றில் உள் இழுக்கப்பட்டேனோ, அப்போதெல்லாம் வலது கையை பயன்படுத்தி மேலே வந்தேன். அந்த ஆறு இப்படி ஒரு நிலையில் இருக்கும் என எனக்கு தெரியாது. சாதாரணமாகத் தான் நினைத்தேன். பின்னர் ஒரு வழியாக அருகே இருந்த தீவில் கரை சேர்ந்தேன் என தெரிவித்தார்.

First published:

Tags: Trending, Viral