சாலையில் சோப்பு போட்டு குளித்து ஸ்மார்ட் போராட்டம்...வைரல் வீடியோவால் கலெக்டர் அதிரடி!

சாலையில் சோப்பு போட்டு குளித்து ஸ்மார்ட் போராட்டம்...வைரல் வீடியோவால் கலெக்டர் அதிரடி!
சாலையில் சோப்பு போட்டு குளித்து ஸ்மார்ட்போராட்டம்
  • Share this:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாகியுள்ளது. இதனை கண்ட இளைஞர் ஒருவர் நடத்திய சாமர்த்திய போராட்டமும் அதற்கு கிடைத்த தீர்வும் ட்விட்டரில் பாராட்டு பெற்று வருகின்றது.

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனிடையே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாலையில் வீணான தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து போராடியுள்ளார். இதனை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்திரசேகர் நடத்திய ஸ்மார்ட் போராட்டத்திற்கு திருப்பூர் கலெக்டர் கவனத்திற்கு செல்லும் வர நெட்டிசன்கள் ஷேர் செய்துள்ளனர். இதனைக் கவனித்த திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading