Bike Stunt-ல் Mass காட்டுறேனு கீழே விழுந்த இளைஞர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ தற்போது முகநூல், இன்ஸ்டாகிராம் என மீம்ஸ் பேஜ்களில் வலம் வருகின்றது. வீடியோவை பார்த்த பலரும் பெரிய பொல்லாதவன் தனுஷ் நினைப்பு எனவும், பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையை தேடும் இளைய தலைமுறைகள் எனவும் மொத்த பேரும் விழுந்து வாருங்கடா அப்போது கூட திருந்தமாட்டிங்க எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

  • Share this:
    இளைஞர் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் , விதிமுறைகள் கடைபிடிக்காமல் ஒ.. ஆ.. என ஆட்டம் போட்டு கொண்டு பைக்கில் ஊர் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் இறுதியில் நடந்தது தான் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பேச வைத்துள்ளது.

    நண்பர்களோடு சேர்ந்து இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர் கூட்டமாக சாலையில் வலம் வந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது . வீடியோவில் இளைஞர்கள் கூட்டமாக பைக்கை ஓட்டி வருகையில் ஒருவர் வளைந்து நெளிந்து ஸ்டைலாக பைக்கை ஓட்ட நினைத்து அதனை அருகில் இருந்துவரும் அப்படியே பின்பற்றி உள்ளார். பின்னர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். தலையில் யாரும் ஹெல்மெட் போடாதவாறு, விதிமுறையை எதையும் பின்பற்றாதவாறு இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளனர்.

    இந்த வீடியோ தற்போது முகநூல், இன்ஸ்டாகிராம் என மீம்ஸ் பேஜ்களில் வலம் வருகின்றது.வீடியோவை பார்த்த பலரும் பெரிய பொல்லாதவன் தனுஷ் நினைப்பு எனவும், பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையை தேடும் இளைய தலைமுறைகள் எனவும் மொத்த பேரும் விழுந்து வாருங்கடா அப்போது கூட திருந்தமாட்டிங்க எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.



     




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: