தனக்கு பிடித்த நபரை டேட்டிங் செய்து, இருவருக்குள்ளும் ஒத்து போன பிறகு திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம் என்று பலர் நினைப்பதுண்டு. டேட்டிங் என்கிற கலாச்சாரம் சில வருடங்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் டேட்டிங் என்பது மிக சாதாரணமான ஒன்று. ஆனால் நம் நாட்டில் இன்னும் அந்த அளவிற்கு இந்த டேட்டிங் கலாச்சாரம் எல்லா மக்களிடமும் செல்லவில்லை. ஒருவரை எளிதாக நட்பாக்கி டேட்டிங் செய்வதற்கு இன்று பலவித செயலிகள் உள்ளன.
நாம் டேட்டிங் செய்யும் நபர் நாகரிகமான மனிதராக இருப்பது மிக அவசியம். இல்லையேல் லாரன் என்னும் பெண்மணிக்கு நடந்த சம்பவம் தான் நமக்கும் நடக்கும். லண்டனை சேர்ந்த லாரன் சில்வியா என்கிற பெண்மணி 6 வருடத்துக்கு முன் ஒருவரை டேட்டிங் செய்துள்ளார். அப்போது அவருக்கு நடந்த மிக கசப்பான அனுபவத்தை ட்விட்டரில் அவர் 6 வருடங்களுக்கு முன் பகிர்ந்துள்ளார். அப்போதே அது வைரலானது.
தற்போது மீண்டும் அந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. லாரன் 6 வருடத்துக்கு முன் ஒரு நபரை டேட்டிங் செய்துள்ளார். ஆனால் அவருடன் ஏற்பட்ட முதல் டேட்டிங் சந்திப்பு லாரனுக்கு சரியானதாக தோன்றவில்லை. அப்போது அந்த நபர் லாரனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். "ஹாய், இன்று இரவு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாளையும் நாம் சந்தித்து டேட்டிங் செய்யலாமா?" என்று அவர் மெசேஜ் செய்துள்ளார்.
இதற்கு லாரன், "மன்னிக்கவும்! உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் நமக்குள் கெமிஸ்ட்ரி சரியாக இல்லை. எனவே இருவரின் டேட்டிங்கை இத்துடன் முடித்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார். இதற்கு அந்த நபர், "நாம் இருவரும் மீண்டும் ஒருவரை சந்தித்து பேசி பார்ப்போம். அப்போதும் நம் இருவருக்கும் ஒத்து போகவில்லை என்றால், நாம் டேட்டிங்கை முடித்து கொள்ளலாம். நாளை இரவு உங்களுக்காக இரவு உணவை நான் தயார் செய்யட்டுமா? இந்த ஒரு வாய்ப்பை இருவரும் எடுத்து கொள்வோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இதை படித்த லாரன், "மன்னிக்கவும், முன்பின் தெரியாத நபரின் வீட்டுக்கு செல்லும் பழக்கம் எனக்கு கிடையாது. நான் மிகவும் ரொமான்டிக்கான பெண் மற்றும் முதல் பார்வையிலே ஒருவரின் மீது எனக்கு நம்பிக்கை வர வேண்டும். அது உங்களிடத்தில் வரவில்லை. எனவே உங்களுக்கு நல்ல துணை கிடைக்க வாழ்த்துக்கள்" என்று பதில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
"அப்படியென்றால், நான் உங்களுக்காக காபி வாங்கி தந்த அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியுமா? என் பணத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதை வேறொருவருக்கு டேட்டிங் செய்ய நான் செலவு செய்வேன்" என்று அந்த நபர் கூறியுள்ளார். இதை படித்ததும் லாரனுக்கு இப்படியொரு நாகரிக்கமற்ற நபருடன் டேட்டிங் செய்ததை நினைத்து வருத்தம் ஏற்பட்டது.
உடனே லாரன், "டேட்டிங் செய்ததை வீண் என்று நினைத்து இப்படி பணத்தை மீண்டும் கேட்கும் உங்களை நினைத்து அசிங்கமாக உள்ளது. உங்களுக்கு தர வேண்டிய £3.50 (ரூ.350) பணத்தை உங்கள் பேரில் தொண்டு நிறுவனத்திற்கு தரலாமா? அதனுடன் நீங்கள் வந்து போன செலவையும் சேர்த்து £5 பணத்தை உங்கள் சார்பில் அனுப்பலாமா?" என்று கேட்டுள்ளார்.
இந்த மெசேஜ்கள் அனைத்தையும் ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனக்கு நடந்த இப்படியொரு மோசமான டேட்டிங் அனுபவத்தை குறிப்பிட்டு அவர் ட்வீட் செய்துள்ளார். கடைசியாக அந்த நபர் அனுப்பிய மெசேஜை லாரன் முதலில் இணைக்க மறந்து விட்டார். பிறகு மீண்டும் அந்த கடைசி மெசேஜின் ஸ்கிரீன்ஷாட்டை சேர்த்துள்ளார்.
Also read... 1 லட்ச ரூபாய் திருட்டு, முதியவருக்கு உதவிய காவல்துறை அதிகாரி - நெகிழும் நெட்டிசன்கள்!
அதில் அந்த நபர் "என் பணத்தை எதற்கு செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை. எனவே என் பணத்தை இந்த அக்கவுண்டிற்கு அனுப்பி விடவும்" என்று மெசேஜ் செய்துவிட்டு அக்கவுண்ட் விவரங்களையும் அவர் தந்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு 3000 லைக்குகள் கிடைத்துள்ளது. மேலும் பலர் இதை பற்றி ஏராளமான கமெண்ட்களை தெரிவித்துள்ளனர்.
லாரனின் இந்த அனுபவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், இனி யாருடன் டேட்டிங் செய்ய நினைத்தாலும் அவர் நாகரிகமான நபரா என்பதை உறுதி செய்து விட்டு டேட்டிங் செய்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.