ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வேறு வழி தெரியலை.. டேட்டிங் செயலியில் வேலை தேடிய நபர்.. சுவாரஸ்ய சம்பவம்!

வேறு வழி தெரியலை.. டேட்டிங் செயலியில் வேலை தேடிய நபர்.. சுவாரஸ்ய சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Bumble என்ற பிரபலமான டேட்டிங் செயலில் ஒரு நபர் வேலை கேட்டு சாட் செய்த பதிவு வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

உலகம் முழுவதும் எம்என்சி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு டெக் நிறுவனங்கள் தொடர் வேலை நீக்க நடவடிக்கையை செய்து வருகின்றன. இதனால், வேலை இழந்த பலரும் புதிய வேலையை தேடி லிங்கிட்இன், நௌக்கரி உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் வேலைகளை மும்முரமாகத் தேடி வருகின்றனர்.அதேபோல், படித்து முடித்த பல்வேறு இளைஞர்களும் நல்ல வேலைக்காக தேடித் தேடி விண்ணப்பித்து வருகின்றனர்.

பொதுவாக கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தங்களுக்கு சாதகமாக மாற்றி எப்படியாவது வேலை பெற்றுவிட வேண்டும் என்ற விடாப்பிடியான மனநிலையை சிலர் கொண்டிருப்பார்கள் அல்லவா. அப்படித்தான் ஒரு நபர் டேட்டிங் செயலியை கூட விட்டு வைக்காமல் அதிலும் தனக்கு வேலை தேடியுள்ளார். பொதுவாக ஒரு நபர் புதிய நபரிடம் பழகி உறவு கொள்ளவே டேட்டிங் செயலிகள் பயன்படுகின்றன.

அதில், Bumble என்ற பிரபலமான டேட்டிங் செயலியை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு யூசர் பெண்ணிடம் சாட் செய்யத் தொடங்கி நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் நான் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் HR ஆக இருக்கிறேன், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என பதில் கேட்டுள்ளார். அதற்கு நான் முதுநிலை இன்ஜினியரிங் பட்டம் படிக்கிறேன்.உங்கள் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்குமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரும் உங்களுக்கு என்ன விதமான வேலை வேண்டும், இந்த வருடத்துடன் படிப்பு முடிகிறதா என பதில் அனுப்பியுள்ளார்.

இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த பதிவை லைக் செய்து ஜாலியான கமெண்டுகளை போட்டுவருகின்றனர். நாமெல்லாம் லிங்கிட் இன் தளத்தை தான் வேலைக்கு பயன்படுத்துவோம். இவரோ Bumble டேட்டிங் தளத்தில் வேலை தேடி சாட் செய்கிறார். வேற லெவல் இவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Dating apps, Interview, Jobs, Viral News