முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வீட்டில் சிலந்திகள் இருந்ததால் வீட்டை எரிக்க யோசனை கேட்ட இளைஞர்.. இணையத்தில் வைரலான பதிவு...

வீட்டில் சிலந்திகள் இருந்ததால் வீட்டை எரிக்க யோசனை கேட்ட இளைஞர்.. இணையத்தில் வைரலான பதிவு...

வீட்டில் சிலந்தி உள்ளதால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர், சிலந்தி உள்ள புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து, “இந்த இடத்தை நான் எரித்துவிடவா வேண்டாமா?” என கேட்டது வைரலாகியுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :

சிலந்திகள் வீட்டில் இருப்பது பலரையும் அருவெறுப்பாக்கும். அப்படி ஒருவரின் வீட்டில் சிலந்திகள் அதிகமாக இருந்ததால், அவர் செய்த காரியம் தான் இணையத்தில் பேசு பொருளாக்கியுள்ளது

தனது வீட்டில் சிலந்திகள் இருந்ததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர், சிலந்தி உள்ள புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து, “இந்த இடத்தை நான் எரித்துவிடவா வேண்டாமா?” எனக் கேட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த படத்தில், ஒரு பெரிய தாய் சிலந்தியும் பல சிறிய சிலந்திகளும் ஒரு கூட்டமாக இருந்தது. அவையெல்லாம் ஒரு கூடு கட்டி ஒரு பெரிய படைபோல அந்த புகைப்படத்தில் காட்சியளித்தது. இந்தப் பதிவுக்கு நெட்டிசன்களின் அளித்த பதில்கள் தான் அனைவரையும் ரசிக்கச் செய்துள்ளது.

இதற்கு ஒருவர், “நீங்கள் வேக்கம் கிளீனரை பயன்படுத்தி அந்த இடத்தில் பூச்சி மருந்தை அடியுங்கள். பூச்சி மருந்துடன் சேர்த்து சிலந்தியையும் நீங்கள் பிடித்து விடலாம்” எனத் தெரிவித்தார்.

இன்னொருவர், “நீங்கள் வீட்டை எரிக்க வேண்டாம்.. இதைப் பார்த்த பிறகு நான் என் ஃபோனை எரிக்கப் போகிறேன்” எனப் பதிவிட்டு இருந்தார். மற்றொருவர், “இதைப் பார்க்கிறபோதே எனக்கு அருவெறுப்பாக உள்ளது” என எழுதி இருந்தார்.

First published:

Tags: Funny men, Trending