• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சிறிய நீல நிற ஸ்டோனை கொடுத்து ஐஸ்கிரீம் கேட்ட சிறுமி - வைரலாகும் ட்விட்!

சிறிய நீல நிற ஸ்டோனை கொடுத்து ஐஸ்கிரீம் கேட்ட சிறுமி - வைரலாகும் ட்விட்!


சிறிய நீல நிற ஸ்டோனை கொடுத்து ஐஸ்கிரீம் கேட்ட சிறுமி

சிறிய நீல நிற ஸ்டோனை கொடுத்து ஐஸ்கிரீம் கேட்ட சிறுமி

சிறுமி கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் பணத்திற்கு ஈடாக அவள் கையில் இருந்த நீல நிற கல்லை வாங்கி கொண்டு ஒரு ஐஸ்கிரீமை கொடுத்து அனுப்பி இருக்கிறார் ஆண்ட்ரூ ஹிலாரி.

  • Share this:
நாம் அனைவரும் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் இன்டர்நெட் சில நேரங்களில் நம்மை மகிழ வைக்கும் மற்றும் நெகிழ வைக்கும் பல்வேறு போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை நமக்கு காட்டுகிறது. ஞாயிற்று கிழமையான நேற்று பலரும் வழக்கத்தை விட சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவழித்தனர். இந்த நிலையில் நேற்று ஒரு ஐஸ்கிரீம் விற்பனையாளரின் சுவாரஸ்ய கதை அடங்கிய போஸ்ட் மற்றும் ஃபோட்டோ சோஷியல் மீடியாக்களில் மிகவும் வைரலானது. இதயங்களை உருக்கி நம்மை நெகிழ வைக்கும் வகையிலான இந்த சம்பவம் பற்றி பார்க்கலாம்.

ஆண்ட்ரூ ஹிலாரி (Andrew Hilary) என்ற யூஸர் ட்விட்டரில் ஷேர் செய்த போஸ்ட் தான் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் அவர் ஷேர் செய்துள்ள போஸ்ட்டில் தன்னிடம் ஐஸ்கிரீம் கேட்டு வந்த ஒரு சிறுமி, எப்படி ஒரு நீல நிற கல்லுக்கு ஈடாக ஐஸ்கிரீமை கேட்டார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலை பற்றி ஷேர் செய்து இருக்கிறார்.

நான் வைத்திருக்கும் ஐஸ்கிரீம் ட்ரக்கை நோக்கி வந்த ஒரு சிறுமி தான் கண்டெடுத்ததாக கூறி நீல நிற ஸ்டோனை காட்டி. இந்த ப்ளூ கலர் ஸ்டோனை வாங்கி கொண்டு எனக்கு ஒரு ஐஸ்கிரீம் தருவீர்களா என்று கேட்டாள். எனவே நான் இப்போது ஒரு ப்ளூ ராக் ரிச் (am now one blue rock richer) என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஆண்ட்ரூ ஹிலாரி.

 



 

அதாவது சிறுமி கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் பணத்திற்கு ஈடாக அவள் கையில் இருந்த நீல நிற கல்லை வாங்கி கொண்டு, ஒரு ஐஸ்கிரீமை கொடுத்து அனுப்பி இருக்கிறார் ஆண்ட்ரூ ஹிலாரி. இதனை தான் ட்விட்டரில் வெளிப்படுத்தினார்.

ALSO READ |  இணையத்தை கலக்கும் ஆடு மற்றும் குரங்கின் நட்பு - மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகும் வீடியோ

இதனை தொடர்ந்து அவரது இந்த ட்விட்டுக்கு ஏரளமான கமெண்ட்ஸ்கள் வந்தன. பலரும் தங்களது கமெண்ட்ஸில் சிறுமி அவருக்கு அளித்த ப்ளூ ஸ்டோனை காட்டுமாறு கூறினர். இதனை தொடர்ந்து ஆண்ட்ரூ ஹிலாரி சிறுமி கொடுத்த ப்ளூ கலர் ஸ்டோனுடன் தான் எடுத்து கொண்ட செல்ஃபியை ஷேர் செய்து 'என்னுடைய நிதி' (My Finances) என்று கேப்ஷனிட்டு போஸ்ட் செய்தார்.

 



 

தொடர்ந்து மற்றொரு கமெண்ட்டில் ப்ளூ ஸ்டோனை வாங்கி கொண்டு தான் சிறுமிக்கு ஐஸ்கிரீம் கொடுத்ததாக வெளிப்படுத்திய ட்விட்டை யாரும் எனது முதலாளியிடம் காட்டி விட வேண்டாம் என்று வேடிக்கையாக கூறி இருக்கிறார் ஆண்ட்ரூ ஹிலாரி.

 

 



 

மேலும் இந்த சம்பவத்தில் இவரது முதல் ட்வீட் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: