மேற்குவங்கத்தில் மம்தாவின் வெற்றியை பறைசாற்றும் விதமாக வைரலாகி வரும் த்ரோபேக் புகைப்படம்!

மேற்குவங்கத்தில் மம்தாவின் வெற்றியை பறைசாற்றும் விதமாக வைரலாகி வரும் த்ரோபேக் புகைப்படம்!

மம்தா

தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மேற்குவங்கத்தில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜி மீண்டும் முதல்வராகிறார். மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி காலை தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் முன்னிலை வகித்த பா.ஜ.க, சில சுற்றுகளிலேயே பின்தங்கியது. தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. இதையடுத்து இறுதியில் வெற்றி மம்தா பக்கமே சாய்ந்தது.

ஏனெனில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டியும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி மட்டும் ஆரம்பம் முதலே பின்தங்கி இருந்தார். கடைசி சில சுற்றுகள் வரையிலும், திரிணாமுல் காங்கிரஸின் மிக முக்கிய பொறுப்பில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து நந்திகிராமில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை சமயத்தில் பல குழப்பங்கள் நிலவி வந்த போதும் இறுதியில் பாஜகவில் இணைந்த சுவேந்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.

நந்திகிராமில் தோல்வியை தழுவினாலும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க போவது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் நாட்டின் பல கட்சித் தலைவர்கள் இவரது வெற்றிக்கும், பாஜகவை அம்மாநிலத்தில் தோற்கடித்ததற்காகவும் அவரை வாழ்த்தியுள்ளனர். சந்தேகத்திற்கு இடமின்றி, இது கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் மம்தா பானர்ஜி வென்ற கடினமான தேர்தல்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் ஒரு உயர் டெசிபல் பிரச்சாரமாக இருந்து வருகிறது.

Also read... கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர் - இலவச சேவை வழங்கி அசத்தல்!

இதையடுத்து, தனது வெற்றி உரையில் பேசிய சூப்பர்மா (மம்தா), " இது வங்காளத்திக்கான வெற்றி மட்டுமல்ல, இந்தியாவுக்கான வெற்றியும் தான்." என்று கூறியுள்ளார். இதையடுத்து, ‘இந்தியன் ஹிஸ்டரி பிக்ஸ்’ என்ற ட்விட்டர் வலைத்தள பக்கம், 1980-களில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. வாக்கு எண்ணிக்கை நாளன்று வெளியான இந்த புகைப்படம் சில மணி நேரங்களிலேயே வைரலாக ஆரம்பித்துள்ளது.இந்த புகைப்படத்திற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல இந்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், பானர்ஜி ஒரு தலைவராக வரலாற்றில் நிச்சயமாக ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டனர்.மேலும் இதுகுறித்து அரசியல் வர்ணனையாளரும், ‘திதி: தி அன்டோல்ட் மம்தா பானர்ஜி’ புத்தகத்தின் எழுத்தாளருமான ஷூட்டாபா பால் கூறியதாவது, “நான் சொற்பொழிவாற்றியதை விட அதற்கு மேலாக மம்தா இன்று தனது கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு மேலான தனது அரசியல் வாழ்க்கையில் மிகக் கடினமான போராட்டத்தை நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல தேசிய தலைவர்களின் வலிமையை எடுத்துக்கொண்டு மம்தா வெற்றி பெற்றுள்ளார். 1998ல் திரிணாமுல் காங்கிரஸை (டி.எம்.சி) அமைப்பதற்காக மிகப் பெரிய பழைய கட்சியிலிருந்து விலகியதிலிருந்து, மம்தாவின் ஆளுமை எப்போதுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: