தாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ

தாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ
கோலா
  • Share this:
ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் தாயை இழந்த கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டிய செயல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

பணம் , வேலை , வெற்றி , முன்னேற்றம் , சாதி , மதம் என இங்கு பலரும் மனிதம் மறந்து ஓடிக்கொண்டிருக்க விலங்குகள் இடத்தில் எவ்வித வேற்றுமையும் இல்லாமல் மனிதர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள்  இறந்தன. மரம் , செடி , கொடிகளும் தீயில் கருகி சாம்பலாயின. சில விலங்குகள் உறவுகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் நரி ஒன்று கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.


காட்டு தீயில் தனது தாயை இழந்த குட்டிகளுக்கு வேற்றுமை பாராமல் பாலூட்டிய நரியின் செயலை ட்விட்டர் வாசிகள் பாராட்டி வருகின்றனர்.

First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்