முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / குட்டி கரடிக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தை கற்றுக்கொடுக்கும் தாய் கரடி... - இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

குட்டி கரடிக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தை கற்றுக்கொடுக்கும் தாய் கரடி... - இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

நெகிழ்ச்சி வீடியோ

நெகிழ்ச்சி வீடியோ

ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தாய் கரடி ஒன்று தனது குட்டிக்கு விளையாட்டு பூங்காவில் எப்படி சறுக்கி விளையாடுவது என கற்றுக்கொடுக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு கரடி சொல்லிக்கொடுக்கும் உற்சாக விளையாட்டு ஒரு எடுத்துக்காட்டு என இணையத்தில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரோலினாவின் ஆஷெவில்லில் உள்ள ஐசக் டிக்சன் தொடக்கப் பள்ளியின் ( Isaac Dickson Elementary School )ஆசிரியர் பெட்ஸி ஸ்டாக்ஸ்லேஜர் இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.

"இந்த நாள் என் நாள் - பள்ளியில் விளையாட்டு மைதானம் ... முழுவதும் பாருங்கள் !! தாய் கரடி எவ்வாறு சர்க்கஸில் விளையாடுகிறது என்பதைப் பாருங்கள் என வீடியோவின் தலைப்பில் பதிவிட்டுள்ளார். பகிரப்பட்டதிலிருந்து, 3.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது பல்வேறு சமூக ஊடக தளங்களில் பலரால் மீண்டும் பகிரப்பட்டது. இது குறித்து பலரும் கமெண்ட்ஸில் நான் வேடிக்கையான கரடிகளை விரும்புகிறேன் என்று ஒரு பேஸ்புக் பயனர் எழுதினார். அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது மற்றொருவர் முகநூலில் எழுதி உள்ளார்.

கரடிகள் இரண்டும் இணைந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவது போல் சமீபத்தில் யானையின் செயல் ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் தாய் யானை தூங்கிக் கொண்டிருக்கும் குட்டியை எழுப்ப கடுமையாக முயன்றும் பலனில்லை. இறுதியில், யானை காப்பாளர்கள் குட்டியை தூக்கத்தில் இருந்து எழுப்ப வருகிறார்கள். அவர்களை தாய் யானை கூட்டி வருகின்றது.

ட்விட்டரில் இந்த வீடியோ வைரலானது.

First published:

Tags: News On Instagram, Viral Video