#Trending | கிராமத்தின் பேசுபொருளாக மாறிய பால் சுரக்கும் ஆண் ஆடு..

ராஜஸ்தானில் ஒரு ஆண் ஆடு பால் சுரக்கும் தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

#Trending | கிராமத்தின் பேசுபொருளாக மாறிய பால் சுரக்கும் ஆண் ஆடு..
மாதிரி படம்
  • Share this:
ஒரு ஆண் ஆடு பால் சுரக்கிறது என்ற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விந்தை ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. தோல்பூரில் விவாசாயி ஒருவரின் ஆண் ஆட்டிற்கு பால் சுரக்கும் செய்தி தான் தற்போது அந்த கிராமத்தின் பேசுப் பொருளாகவே உள்ளது.

ராஜீவ் குஷ்வாஹா என்பவரின் ஆண் ஆடு தினமும் 200 முதல் 250 மில்லி பால் சுரக்கிறது. இந்த அதிசயத்தை அக்கம்பக்கத்தினர் பார்த்து வியப்படைந்துள்ளனர். இது தொடர்பாக ராஜீவ் ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், இந்த ஆட்டை நான் 6 மாதங்களுக்கு முன்னர் தான் வாங்கினேன். கடந்த சில தினங்களாக ஆட்டிடம் சில மாறுபட்ட வித்தியாசமான நடவடிக்கைகளை நாங்கள் கவனித்தோம். ஆண் ஆட்டிடம் பால் சுரக்க முயன்ற போது பால் வந்ததை கண்டு நாங்களும் வியந்தோம்“ என்றார்.



ஆண் ஆட்டிற்கு எப்படி பால் சுரக்கும் என்று மருத்துவர் கூறுகையில், “இது மிகவும் அரிதான சம்பவம். மில்லியன்களில் ஒரு வழக்கு இதுபோன்று அமைய வாய்ப்புள்ளது. கருவின் பாலின நிர்ணயம் செய்யும் கர்ப்ப காலத்தில், ஆண் மற்றும் பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் இருக்கும் போது இதுபோன்ற வாய்ப்பு ஏற்படும். ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்பு இல்லாமல் இரண்டாம் நிலை பாலியல் நிலையை இது உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading