நாய் என நினைத்து கரடியை வளர்த்த பாடகி கைது

”நான் பிரபலப் பாடகியாக இருக்கிறேன். அதிகமாகச் சம்பாதிக்கிறேன். விலங்குகளை விற்க வேண்டிய அவசியம் இல்லை” என பாடகி பதில் அளித்துள்ளார்.

Web Desk | news18
Updated: June 14, 2019, 7:39 PM IST
நாய் என நினைத்து கரடியை வளர்த்த பாடகி கைது
கரடி
Web Desk | news18
Updated: June 14, 2019, 7:39 PM IST
மலேசியாவைச் சேர்ந்த பாடகி ஸரித் சோஃபியா யாசின் செல்லப்பிராணியாகக் கரடியை வளர்த்துள்ளார். இதையறிந்த வனவிலங்கு துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 

தான்  நாய் என நினைத்துதான் எடுத்து வளர்த்ததாகவும், அது கரடி என்பது தெரியாது எனவும் கூறியுள்ளார்.

”இரவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் ஏதோ குட்டி ஒன்று தவித்துக் கொண்டிருந்ததைப் போன்று பார்த்தேன். அருகில் சென்றபோது அது நாய்க் குட்டி போல் தெரிந்தது. காப்பாற்ற எண்ணியே வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என போலீஸிடம் விளக்கம் அளித்துள்ளார்.பின்னர் ஸரித்தின் நண்பர் அளித்துள்ள பேட்டியில் புக்கிட் ஆம்பங்-கிற்கு ( Bukit Ampang )  சுற்றுலா சென்ற போது பலவீனமாக இருந்த கரடியைக் காப்பாற்றி வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார் என தெரிவித்தார். ”ஸரித் சட்டங்களை மதிப்பவர். விடிந்த உடனே கரடிக் குட்டியைப் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் அடிபட்டிருந்ததால் மருத்துவ உதவிகள் செய்து உணவு வழங்கியுள்ளார். அதுவரை  சிறந்த செல்லப்பிராணி போல் அவரிடம் அமைதியாகவும், அன்பாகவும் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

எப்படி வனத்துறைக்கு தெரிந்தது?

அந்தக் கரடி வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளது. அதைக் கண்ட இருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது மிகவும் வைரலானதும் வனத்துறையினர்  தகவல் அறிந்து ஸரித்தை கைது செய்துள்ளனர்.
Loading...
இது தொடர்பாக தெரிவித்த ஸரித் ”நான் பிரபலப் பாடகியாக இருக்கிறேன். அதிகமாகச் சம்பாதிக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் விலங்குகளை வைத்து வணிகம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...