மலேசியாவில் சிறுமி ஒருவர், கடும் வெள்ளப்பெருக்கால் உடைந்து போன பாலத்தின் மறுபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு கடந்து செல்லும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 3 மாத அளவில் 3வது முறையாக மலேசியா கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக மலேசியாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திரெங்கானு , கிளந்தான் மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 3 பேர் இறந்துள்ளனர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 20,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மலேசியாவின் பேரிடர் மீட்பு குழுவினர், அப்பகுதி மக்களுடன் ஒன்றிணைந்து தீவிர மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மலேசியாவில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ALSO READ | பிச்சை எடுத்து வாழ்ந்த பெண் இறந்த பிறகு குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அதில் சிறுமி ஒருவர் உடைந்து கிடந்த மின்கம்பத்தை பயன்படுத்தி பாலத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனையை துணிச்சலுடன் கடந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக தெரெங்கானுவில் கம்போங் பெலுகர் புக்கிட் கிராமத்தில் வெள்ளத்தால் ஆற்றுப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பாலத்தின் ஒருபுறத்தில் சிக்கிக்கொண்ட சிறுமி, மற்றொரு புறத்தில் உள்ள இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு இதே நிலை நீடித்துள்ளது.
இதனிடையே மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்த நிலையில், மறுபுறம் உள்ள தனது வீட்டிற்கு செல்ல சிறுமி முடிவெடுத்தார். இதற்காக பாலத்திற்கு நடுவே கிடந்த மின் கம்பத்தை சிறுமி துணிச்சலுடன் கடந்து சென்றுள்ளார். அந்த வீடியோவில் சிறுமி மின்கம்பத்தை பிடித்துக்கொண்டு மெதுவாக முன்னோக்கி செல்லும் காட்சிகளும், இருபுறமும் நின்றிருக்கும் ஊர் மக்கள் அவரை உற்சாகப்படுத்தி, பொறுமையாக முன்னேறி வரச்சொல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
ALSO READ | உயிரோடு இருக்கும் போதே இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த பெண்!.. காரணம் என்ன தெரியுமா?
இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உயர் மின் அழுத்த கேபிள் உள்ள கம்பத்தின் மீது சிறுமி நடந்து செல்லும் காட்சிகளை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தால் சிறுமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாலும், கம்பத்தில் இருந்து சறுக்கி விழுந்தால் கீழே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் சிக்கிக்கொள்ள நேரிட்டிருக்கும் என கவலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியா 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோரின் வீடு, கார் உள்ளிட்டவை சேதமடைந்தது. நடப்பு ஆண்டில் மலேசிய இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கால் அவதியுறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.