ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உயிருடன் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. ஆட்டை வெளியே இழுக்கும் பதறவைக்கும் வீடியோ

உயிருடன் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. ஆட்டை வெளியே இழுக்கும் பதறவைக்கும் வீடியோ

மலைப்பாம்பு

மலைப்பாம்பு

மலைப்பாம்பு வைரல் வீடியோ: மலைப்பாம்பைக் காப்பாற்ற 8 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaMalaysiaMalaysiaMalaysiaMalaysia

  மலேசியாவில் 20 அடி நீள மலைப்பாம்பு, ஆட்டை உயிரோடு விழுங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர், பாம்பை பிடித்து ஆட்டை வெளியே இழுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

  மலேசியாவில் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, ஆடு ஒன்றை உயிரோடு விழுங்கியது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஆடு மலைப்பாம்பு வாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும் ஆடு ஏற்கனவே இறந்துவிட்டது. அந்த மலைப்பாம்பு சுமார் 77 கிலோ எடை கொண்டது. மேலும் அந்த ஆட்டின் எடை 10-12 கிலோ வரை இருந்தது.

  ' isDesktop="true" id="811946" youtubeid="pNFWLB9SKks" category="trend">

  அந்த பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போனது. அதன் உரிமையாளர் அதை தேடிக்கொண்டிருந்த நிலையில் தனது ஆடு மலைப்பாம்பால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார். பின்னர் அது உறுதி செய்யப்பட்டது. 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முழு ஆட்டையும் விழுங்கிய நிலையில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதையும் வாசிக்க: காட்டிற்கு செல்லும் போது விலங்குகளை போல நடந்து கொள்ளுங்கள் - வரவேற்பை பெற்ற IFS அதிகாரியின் ட்வீட்

  பாம்பைக் காப்பாற்ற 8 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டது. அந்த வீடியோவில், பாம்பை குகைக்குள் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டு அதன் வாயிலிருந்து ஆடு வெளியே இழுக்கப்பட்டது.

  விலங்குகளை உண்பதில் நிபுணத்துவம் பெற்ற மலைப்பாம்புகள் பொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இருப்பினும், அவை பொதுவாக காடுகள், புல்வெளிகள் மற்றும் மழைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. மலைப்பாம்புகள் ஊனுண்ணிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளை உண்கின்றன. மான்கள், பன்றிகள் அல்லது ஆடுகள் உள்ளிட்ட பெரிய விலங்குகளை அவர்கள் சாப்பிடுவது அரிதான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Malaysia, Python, Snake