VOGUE இதழில் மெக்டொனால்ட் முதல் போக்கர் விளையாட்டு வரை - மெயர்சிலிர்க்கும் மலாலா!

மலாலா

இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு, உயிருக்கு போராடி மீண்டு வந்த அவரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.

  • Share this:
இங்கிலாந்துக்கான VOGUE இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள மலாலா, தன்னுடைய கடந்த கால அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த மலாலா, அங்கு இருக்கும் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வந்தார். அவரின் குரலை நசுக்க நினைத்த தலீபான் தீவிரவாதிகள் மலாலாவை துப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்து உயிருக்குப்போராடிய மலாலாவை, பாகிஸ்தான் ராணுவத்தால் மீட்கப்பட்டு இங்கிலாந்து அழைத்துச் சென்று உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு, உயிருக்கு போராடி மீண்டு வந்த அவரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. அவரின் துணிகர செயலைப் பாராட்டி உலக அமைத்திக்கான நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது. 17 வயதில் நோபல் பரிசு பெற்ற அவர், உலகிலேயே மிக குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்ற சிறுமி என்ற சிறப்பை பெற்றார். இங்கிலாந்தில் தங்கி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அவர், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், உலகளவில் பெண் குழந்தைகளுக்கு படிப்பு வழங்குவது குறித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது 23 வயதாகும் மலாலாவின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக புகழ்பெற்ற VOGUE இதழ் இங்கிலாந்துக்கான அட்டைப்படத்தில் அவரது புகைப்படத்தை அச்சிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. மூன்று விதமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிகப்பு நிற மேலாடை, வெள்ளை நில மேலாடை மற்றும் சிவுப்பு உடை, நீல நிற ஷால் அணிந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்களை VOGUE இதழ் தங்களுடைய இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. தன்னுடைய வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மலாலா பகிர்ந்து கொண்டதும் வெளியாகியுள்ளது.

"எனக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்துக்குப்பிறகு (தலீபான்கள் துப்பாக்கிச்சூடு) என் ஒத்த வயதினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்தேன், புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். ஆவணப் படம் ஒன்றை எடுத்தேன். மேலும் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன். இறுதியாக பல்கலைக்கழகத்தில் எனக்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். என் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினேன். அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெக்டொனால்ட் உணவகத்துக்கு சென்றேன். போக்கர் கேம் விளையாடினேன். இதை எல்லாம் நான் முன்பு பார்த்ததில்லை, விளையாடியதில்லை. எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என மலாலா தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த மலாலா, "இந்தக் கேள்வி எனக்குள்ளும் நாள்தோறும் எழுகிறது. தினமும் படுக்கையில் இருந்து எழும்போதெல்லாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம்? என யோசிப்பேன்" எனத் தெரிவித்தார்.

Also read... பாபா ராம்தேவ்விற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் - நடந்தது என்ன?

பெண்களுக்கான கல்வியை பொறுத்த வரை இப்பொழுதும் அதே நிலையிலேயே இருப்பதாகவும், அதில் இன்னும் கூடுதல் கவனமும் முயற்சியும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 11 வயதில் பெண் குழந்தைகளின் உரிமைக்காக மலாலா குரல் கொடுக்க தொடங்கியதாகவும், 13 ஆண்டுகள் கழித்தும் அதே நிலையில் நீடிப்பதாக வாக்யூ இதழ் கூறியுள்ளது. 11 வயது மலாலா குறித்து பேசிய அவர்," அந்த சிறுமி இதயத்தில் தாங்கிக்கொண்டிருந்த இருந்த சக்தியை எனக்கு தெரியும் (I know the power that a young girl carries in her heart)" என கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பெண்கள் கலாச்சார உடையை அணிவதாகவும், அதனடிப்படையில் பெண்கள் ஒடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் கலாச்சாரத்திற்குள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மலாலா தெரிவித்துள்ளார். மலாலாவின் சேவையை பாராட்டி ஒபாமா தம்பதி தெரிவித்த கருத்தையும் VOGUE இதழ் நினைவுகூர்ந்துள்ளது. 17வயது சிறுமியிடம் தெளிவான அறிவையும், தொலைநோக்கு பார்வையையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால், என்னுடைய முதல் சந்திப்பிலேயே மலாலாவிடம் அவை இருந்ததை பார்த்தேன் என மிட்செல் ஒபாமா தெரிவித்த கருத்தை நினைவுபடுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: