நெட்டிசன்களை வாவ் சொல்லவைக்கும் கம்பீரமான வெள்ளை புலி - வைரல் வீடியோ!

வெள்ளைப் புலி

அமெரிக்க விலங்குகள் சரணாலயத்திலுள்ள வெள்ளைப் புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  புலிகள், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பெரிய காட்டு விலங்குகளின் வீடியோக்களைப் பார்ப்பதை நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் கட்டாயம் இந்த வீடியோ உங்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாலோம் வனவிலங்கு சரணாலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் வெள்ளை புலி ஒன்றின் வீடியோ நெட்டிசன்கள் புருவத்தை உயர்த்தியது என்று சொல்லாம். இந்த வீடியோ கட்டாயம் அந்த வெள்ளை புலியை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு கம்பீரமாக தோற்றமளித்துள்ளது.

  பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், அந்த சரணாலயத்தில் வசிக்கும் ஜிஞ்சர் என்ற வெள்ளை புலியை காண்பிக்கிறது. ஜிஞ்சர் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருப்பதை அந்த பதிவு காட்டுகிறது. வீடியோ முழுவதும், அழகான பெரிய பூனை தனது கம்பீரமான தோற்றத்தில் அமர்ந்திருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்ததோடு அதில் "எங்கள் அழகான பெண்," என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  ஜூன் 27 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ கிளிப் 23,000 க்கும் மேற்பட்ட ஷேர்ஸ்களையும் 3.2 லட்சத்திற்கும் அதிகமான ரியாக்சன்களையும் பெற்றுள்ளது. சிலர் புலியின் அழகைக் கண்டு மயங்கியதாக கமெண்ட் செய்திருந்தனர். மற்றவர்கள் வீடியோவை பார்த்து GIF மூலம் தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர். ஜிஞ்சர் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை வர்ணிக்கமுடியவில்லை என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.


  சமீபகாலமாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அதிலும், வனவிலங்குகளின் செயல்பாடுகள் பல சிசிடிவி கேமரா உதவியுடன் பதிவு செய்யப்பட்டு அடிக்கடி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் வனவிலங்கு சரணாலயங்களில் வசித்து வரும் புலி மற்றும் சிறுத்தைகளின் வீடியோக்களும் அதிகம் வைரலாகி வருவது வழக்கமாகியுள்ளது. இதேபோல "Big Cat" வகையை சேர்ந்த லின்க்ஸ் மிருகத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தன்னை போலவே இருக்கும் ஒரு பூனையை கண்டு அதிசயித்து பார்த்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக ரெடிட் எனும் வலைதளபக்கத்தில் பகிரப்பட்ட அந்த 15-வினாடி கிளிப்பில், வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் லின்க்ஸை கண்ணாடி தடுப்பு வழியாக பார்த்த வளர்ப்பு பூனை ஒன்று அதனை எழுப்ப கண்ணாடி கதவை தனது கால்களால் தடவியது. எதோ தன் பின்னால் இருப்பதை உணர்ந்த லின்க்ஸ் பதறி எழுந்து திரும்பி பார்த்தபோது தன்னை போலவே இருக்கும் பூனையை ஆச்சர்யப்பட்டு பார்த்துள்ளது. இந்த வைரல் வீடியோவை பதிவிட்ட நபர், "தாழ்வாரத்தில் தூங்கிய லின்க்ஸ் அதன் சிறிய டாப்பல்கெஞ்சரால் எழுப்பிவிடப்பட்டது " என்று கேப்ஷன் செய்துள்ளார். இந்த வீடியோ பலரும் ரசித்து கமெண்ட் செய்துவருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: