மகாராஷ்டிராவில் குதிரையில் வேலைக்கு செல்ல அனுமதி கோரி அரசு ஊழியர் விண்ணப்பம்!

மகாராஷ்டிராவில் குதிரையில் வேலைக்கு செல்ல அனுமதி கோரி அரசு ஊழியர் விண்ணப்பம்!

மாதிரி படம்

தேஷ்முக் தனது கடிதத்தில் ஒவ்வொரு நாளும் குதிரையில் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியது மட்டுமல்லாமல், அலுவலக வளாகத்திற்குள் குதிரையை நிறுத்தவும் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று பரவலால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வந்தனர். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பல மாதங்கள் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டு வருகிறது. பல மாதங்களாக வீட்டிலிருந்து வேலை செய்த ஊழியர்கள் தற்போது அலுவகதிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சாதாரண விஷயம் அல்ல, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதே தவிர, இன்னும் முடிவடையவில்லை. இதனால் பெரும்பாலானோர் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று தினசரி வேலைக்கு செல்லும் பயணமாகும்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பொது போக்குவரத்து பாதுகாப்பற்றதாக இருப்பதால், பலர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற தனிப்பட்ட வாகனங்களை தேர்ந்தெடுத்து பயணித்து வருகின்றனர்.
ஆனால் இவற்றை வாங்க முடியாதவர்கள் வேறு வழியின்றி பொது பொதுக்குவரத்து வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த சூழலில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரத்தைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர், தினமும் குதிரையில் வேலைக்கு செல்ல தனது முதலாளியிடம் அனுமதி கேட்டுள்ள சம்பவம் தான் தற்போது ட்ரெண்டிங்.

சதீஷ் பஞ்சாப்ராவ் தேஷ்முக் என்பவர் நாந்தேட் கலெக்டரேட்டில் உள்ள வேலைவாய்ப்பு துறையில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் குதிரையில் தினமும் வேலைக்கு வர அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தேஷ்முக், நான் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைய பொது போக்குவரத்தில் வர இயலவில்லை. இதுவரை பைக்கில் வந்த நிலையில், தற்போது உடல்நிலை காரணமாக, பைக் ஓட்டுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னால் கார் வாங்க முடியவில்லை, அதற்கு பதிலாக குதிரையை வாங்க அனுமதி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Also read... பெருமூளை பாதிப்பு - சிகிச்சைக்கு தானே நிதி திரட்டிய 7 வயது சிறுமி!

தேஷ்முக் தனது கடிதத்தில் ஒவ்வொரு நாளும் குதிரையில் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியது மட்டுமல்லாமல், அலுவலக வளாகத்திற்குள் குதிரையை நிறுத்தவும் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டிற்கு ஏராளமானோர் வேடிக்கையாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். மேலும் சிலர் அவருக்கு அனுதாபங்களும் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாரணாசியில் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அதில் காவல்துறையினரால் நடத்தப்படும் ஒரு குதிரை பயிற்சி பள்ளியில் குதிரை சவாரி கற்றுக்கொள்ள வாரணாசியின் வழக்கறிஞர் ஒருவர் விண்ணப்பித்தார். மூத்த காவல்துறை கண்காணிப்பாளருக்கு (எஸ்.எஸ்.பி) அவர் அளித்த விண்ணப்பத்தில், வழக்கறிஞர் டாக்டர் ஹரிஷ் சந்திரா என்பவர் தனது வீடு நீதிமன்றத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது என்றும் வீட்டிலிருந்து வேலைக்கு செல்ல, குதிரை சவாரி கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எரிபொருள் விலை உயர்ந்துள்ளதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: