'வாழ்த்து தெரிவிக்கும் தாய்' வைரலாகும் ஆதித்யா தாக்ரேவின் கனவு புகைப்படம்...!

 • Share this:
  சிவசேனா இளைஞரணி தலைவரும் வோர்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்ரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  மகாராஷ்டிராவில் பல உச்சக்கட்ட குழப்பங்களுக்கு பின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழா சிவசேனா ஆண்டுதோறும் தசரா விழாவை நடத்தும் சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற்றது.

  இந்நிலையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்ரே சமீபத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் உத்தவ் தாக்ரேவிற்கு அவரது மனைவி ரஷ்மி தாக்கரே கைக்கொடுத்து வாழ்த்து கூறுகிறார்.
  அந்த புகைப்படத்துடன், “ஒரு வார காலமாக இந்த தருணத்தை தான் எதிர்பார்த்தோம், கனவு போல் இருந்தது. நன்றியுணர்வு நிரந்தரமானது. வாழ்த்துகள் முதல்வர் உத்தவ் தாக்கரே. உங்கள் தலைமையிலும் உங்கள் அமைச்சரவையிலும் மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்“ என்று பதிவிட்டுள்ளார்.

  ஆதித்யா தாக்ரேவின் இந்த பதிவிற்கு 60,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் தங்களது வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: