• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ரூ.50-க்கு வாடகை காக்கா... அமாவாசை பிசினஸ் ஆஹா!

ரூ.50-க்கு வாடகை காக்கா... அமாவாசை பிசினஸ் ஆஹா!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

விசேஷ நாட்களில் இலவசமாக கிடைத்த மாட்டு கோமியம், வறட்டி இவையெல்லாம் காசுக்கு விற்கப்படும் காலம் உருவாகி விட்ட நிலையில் காக்கா உணவு உட்கொள்ள வாடகை வசூலிக்கும் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

  • Share this:
    அமாவசை அன்று வீட்டில் வகை வகையான சாப்பாடு சமைத்து அதை முன்னோர்களுக்கு படைத்து வழிபாடுவது என்பது ஐதீகம். அமாவாசைகளில் தை, ஆடி, மஹாளய அமாவாசை ஆகியன முக்கியமானதாகும். இந்த 3 அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம். வேதமுறைப்படி பித்ருக்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரும், ஆண்டுக்கு ஒரு முறை உணவும் அளிக்கப்பட வேண்டும். மாதந்தோறும் தண்ணீர் என்பது எள்ளையும் தண்ணீரையும் கரைத்து விடுவதுதான். ஆண்டுதோறும் உணவு எனப்படுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் முறையான ஐதீகமாகும்.

    அமாவாசை அன்று வீட்டில் வழிபட்ட பின் காக்கைக்கு வாழை இலையில் சாதம் படைப்பார்கள். காகம் அந்த உணவை சாப்பிட்ட பின் தான் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சாப்பிட தொடங்குவார்கள். நாம் வைக்கும் சாதத்தை காக்கை எடுத்தால் அது நம் முன்னோர்களே வந்து சாப்பிட்டு ஆசி வழங்கின்றனர் என்பது பழங்காலம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.

    சாதரண நாட்களில் காக்காவிற்கு நாம் உணவு கொண்டு வைத்தாலே போதும், கத்த கூட தேவையில்லை. சட்டென்று வந்து காக்கா சாதத்தை எடுத்து கொண்டு தனது நண்பர்களையும் அழைக்கும். ஆனால் விசேஷ நாட்கள் மற்றும் அமாவாசை தினங்களில் நாம் எவ்வளவு கா கா என கத்தினாலும் தலைவர் வருவருது சிரமம் தான்.

    காக்கா அன்று முழுவதும் பிசியாகவே இருக்கும். அதற்கு பிடித்த அப்பளம், வடை இருந்தால் மட்டுமே பட்டென்று வந்து சட்டென்று சாப்பிடுவார். அவை இல்லையென்றால் நீங்கள் எவ்வளவு கத்தினாலும் நான் ரொம்ப பிசி என்று வேறு இடத்திற்கு போய்விடும். அதுவும் இல்லையென்றால் சாப்பிட்ட மயக்கத்தில் தலைவர் எங்காவது ரெஸ்ட் எடுத்து கொண்டிருப்பார்.

    Also Read : நோயாளியின் வயிற்றில் 1 கிலோ நகங்கள், ஸ்க்ரூ, கத்திகளை அகற்றிய மருத்துவர்கள்

    பொதுவாக கிராமங்களில் இந்த பிரச்னை இருக்காது. அங்கு மரங்கள் அதிகம் இருப்பதால் காகம் அதிகமாக காணப்படும். ஆனால் அதீத வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் இருக்கும் மரங்களை எல்லாம் நாம் வெட்டி அதில் அடுக்குமாடிகளை கட்டி வைத்து அவற்றை வாழவிடாமல் செய்ததால் இன்று வாடைக்கு காக்கா விடப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. அமாவசை அன்று இதுப்போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலர் இன்று ஷேர் செய்து வருகின்றனர்.



    அந்த வீடியோவில் இருக்கும் நபர் ஒருவர் காக்கையை அவரது வாகனத்தில் வைத்துள்ளார். அவரை தேடி வந்து பலர் காக்கைக்கு உணவளிக்கின்றனர். இதற்கு வாடகையாக அவர் ரூ.50 கட்டணம் பெறுகிறார். நீங்கள் போன் செய்தால் அந்த ஏரியாவிற்கு அவர் வருவார். நீங்கள் உங்கள் படையலை காக்காவிற்கு படைக்கலாம். மாடியில் நின்று கா கா என கத்த தேவையில்லை, எப்போது காக்கா வரும் என்று நீங்கள் காத்திருக்க தேவையில்லை. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

    இயற்கையை நாம் அழித்தால் அதன் விளைவை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதராணமாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: