Home /News /trend /

பறக்கும் கம்பளத்தில் வந்த அலாவுதீன்... கார்ட்டூன் கதையை உண்மையாக்கிய துபாய் இளைஞர்!

பறக்கும் கம்பளத்தில் வந்த அலாவுதீன்... கார்ட்டூன் கதையை உண்மையாக்கிய துபாய் இளைஞர்!

பறக்கும் கம்பளத்தில் வந்த அலாவுதீன்

பறக்கும் கம்பளத்தில் வந்த அலாவுதீன்

இணையத்தில் புயலை கிளப்பிய அந்த வீடியோவில், அனைத்து அலாதீன் ரசிகர்களும் அவர் உயிருடன் வருவதைக் காணலாம். அதுவும் தனியாக இல்லை, அவர் தனது மந்திர பறக்கும் கம்பளத்துடன் வருவதை கண்டு ரசிக்கலாம். பார்ப்பவர்களுக்கு இது மாயமா இல்லை மந்திரமா என்று ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது.

மேலும் படிக்கவும் ...
குழந்தை பருவத்தில் நாம் அனைவரும் கார்ட்டூன்களை மிகவும் விரும்பி பார்த்து மகிழ்ந்திருப்போம். நம் குழந்தை பருவத்தில் இருந்து இப்போதுள்ள குழந்தைகள் வரை பார்க்கும் வகையில் சில அழியாத கார்ட்டூன் கதைகள் உள்ளன. அதில், நாம் அனைவரும் விரும்பி, நேசித்த மற்றும் எப்போதும் நேரில் சந்திக்க விரும்பும் சில கார்ட்டூன் கதாபாத்திரங்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதை தான் அலாவுதீன். இந்த கதையை அடிப்படையாக கொண்டு பல அனிமேஷன் கார்ட்டூன்கள் ஆண்டாண்டு காலமாக பல பரிமாணங்களில் பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றன.

எத்தனை ஆண்டு காலம் கடந்தாலும் அதில் வரும் காதாபாத்திரங்களுக்கு இன்னும் வரவேற்பு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போது எதற்கு அலாவுதீன் கதையை பற்றி இவ்வளவு விளக்கம் என்று நீங்கள் யோசிக்கலாம். காரணம், உண்மையில் அலாவுதீன் பறக்கும் கம்பளத்தில் உங்கள் முன்பு வந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு வைரல் வீடியோ உணரவைத்துள்ளது.

இணையத்தில் புயலை கிளப்பிய அந்த வீடியோவில், அனைத்து அலாதீன் ரசிகர்களும் அவர் உயிருடன் வருவதைக் காணலாம். அதுவும் தனியாக இல்லை, அவர் தனது மந்திர பறக்கும் கம்பளத்துடன் வருவதை கண்டு ரசிக்கலாம். பார்ப்பவர்களுக்கு இது மாயமா இல்லை மந்திரமா என்று ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது.

 



துபாயைச் சேர்ந்த RhyzOrDie என்ற கன்டென்ட் கிரியேட்டர் உருவாக்கிய வீடியோவில், அந்த நபர் அலாவுதீன் போன்று வேடமிட்டுக்கொண்டார். மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர் தனது மிதக்கும் கம்பளத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு மேஜிக் டச்சை வழங்கியுள்ளார். RhyzOrDie என்ற பெயர் கொண்ட யூடியூப் சேனலில் இருந்து வந்த வீடியோ கிளிப்பில் அந்த நபர், வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் அலாதீன் உடையணிந்து, சந்தை மற்றும் தெருக்களில் கம்பளத்தின் மீது நின்றபடி பறப்பதை போல காட்டுகிறது. அவரைச் சுற்றியுள்ள மக்கள் இந்த செயலைக் கண்டு முற்றிலும் குழப்பமடைந்துள்ளனர்.

எலக்ட்ரானிக் லாங்போர்டைச் சுற்றி PVC பைப் பிரேமை வடிவமைத்து RhyzOrDie ஒரு 'மிதக்கும்' கம்பளத்தை உருவாக்கியுள்ளார். பின்னர் அவர் அதன் மேல் ஒரு கம்பளத்தை பொறுத்தியுள்ளார். இப்பொது அது பார்ப்பதற்கு ஒரு மந்திர கம்பளம் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. யூடியூபர் பின்னர் தனது சர்ஃப்போர்டில் ஒரு கம்பளத்தை பொருத்தி, அதை கடலில் ஒரு சர்ஃபிக்காக எடுத்துச் செல்வதன் மூலம் விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளார்.

ALSO READ |  தன்னம்பிக்கை வேணும்... ஐ.பி.எஸ் அதிகாரி பகிர்ந்த நடிகர் சிம்புவின் வசனம் பொருந்திய வீடியோ

RhyzOrDie இன் 2 நிமிடங்கள் 54-வினாடி கொண்ட அந்த மாயாஜால வீடியோ கிளிப்புகள் இதுவரை 95,000 பார்வைகளைப் பெற்றுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் தனது பறக்கும் சவாரியின் ரகசியங்களைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த மேஜிக் கார்பெட் ஸ்டண்டின் பின்னால் உள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அந்த BTS வீடியோவில், யூடியூபர் தனது ஸ்டண்டிற்கு 'eFoil போர்டு' ஒன்றைப் பயன்படுத்தியதாகக் கூறினார். இதன் பொருள் அவர் ஒரு மின்சார ப்ரொப்பல்லருடன் கூடிய சர்ப்போர்டை இந்த மேஜிக்கிற்கு பயன்படுத்தியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி