Home /News /trend /

வினோத உணவு சேர்க்கை ட்ரெண்டில் இணைந்த மேகி நூடுல்ஸ்.! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

வினோத உணவு சேர்க்கை ட்ரெண்டில் இணைந்த மேகி நூடுல்ஸ்.! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

Maggi Pani Puri

Maggi Pani Puri

Maggi Pani Puri | என்னது மேகி பானி பூரியா என்று அதிர்ச்சி அடையாதீர்கள்.. சில நாட்களாக இந்த மேகி பானி பூரியின் ரெசிபி வீடியோ ஒன்று தான் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

ஒரு சிலர் புதிய ஃபியூஷன் டிஷ் ஒன்றை உருவாக்குவதை ரசிக்கிறார்கள். சிலர் ஒரு உணவின் அசல் சுவையை மாற்றுவதை விரும்புவதில்லை. பானி பூரி மிகவும் விரும்பப்படும் தெரு உணவுகளில் ஒன்றாக உள்ளது. அதே போல இந்தியாவில் மிகவும் பிபலமாக இருக்கும் நூடுல்ஸ்களில் முதன்மையானது மேகி. ஜென்டிலான நூடுல்ஸை விரும்புவோருக்கு மேகி எப்போதும் நம்பகமான உணவாக இருந்து வருகிறது. மேகி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கடந்த சில தசாப்தங்களாக பலருக்கு வசதியான உணவாக இருக்கிறது. ஒவ்வொரு மேகி பிரியர்களும் தங்களுக்கு பிடித்த இந்த உணவை ஸ்பெஷலாக்க ஒரு வழியை வைத்திருக்கிறார்கள். நூடுல்ஸை வேகவைத்து மசாலா போடுவது முதல் காய்கறிகளுடன் காரமான உணவாக மாற்றுவது என பல வழிகளில் சாப்பிட்டு வருகிறது இன்ஸ்டன்ட் உணவான மேகி. நீங்கள் எப்போதாவது மேகி பானி பூரியை முயற்சித்து பார்த்திருக்கிறீர்களா.!

என்னது மேகி பானி பூரியா என்று அதிர்ச்சி அடையாதீர்கள்.. சில நாட்களாக இந்த மேகி பானி பூரி ரெசிபி வீடியோ ஒன்று தான் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. ஆன்லைனில் உணவு பரிசோதனைகளுக்குப் பஞ்சம் இல்லாததால் ​​உணவுப் பிரியர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஷேர் செய்வதால் மேகி - பானி பூரி ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் அந்த மேகி - பானி பூரி வீடியோவில், ஒரு நபர் பானிபூரியில் வழக்கமாக நிரப்பும் கொண்டைக்கடலை மற்றும் காரமான உருளைக்கிழங்கு மசாலாவிற்கு பதிலாக இன்ஸ்டன்ட் மசாலா நூடுல்ஸை நிரப்புவதை  காணலாம். பானி பூரியில் சமைத்த நூடுல்ஸை நிரப்பிய பிறகு வாடிக்கையாளருக்கு கொடுக்கும் முன் காரமான புதினா தண்ணீரை சேர்ப்பதையும் அந்த வைரல் வீடியோவில் பார்க்க முடிகிறது.



முகமது ஃபியூச்சர்வாலா என்ற ஒரு ட்விட்டர் யூஸர் இந்த வீடியோவை ஷேர் செய்து"மேகி - பானி பூரியுடன் வாரத்தின் நடுப்பகுதியில் நெருக்கடியைச் சமாளிக்கலாம்... இது உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்" என்று கூறி இருக்கிறார். 11 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ கிளிப் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. எனினும் இந்த வினோத ரெசிபியை ஷேர் செய்த யூஸரை சில மேகி பிரியர்கள் திட்டி கமெண்ட்ஸ் செய்துள்ள அதே நேரத்தில் ஒரு சிலர் இந்த புதிய ஸ்னாக்ஸை முயற்சி செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அவருக்கு ஆதரவளித்து உள்ளனர். ஒரு யூஸர் வாவ்.! என்ன ஒரு வித்தியாசமான முயற்சி என்று பாராட்டி உள்ளார். தற்போது வரை இந்த வைரல் வீடியோவை சுமார் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து உள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Maggi, Trending

அடுத்த செய்தி