கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் ’எலி’ மகவா பணியில் இருந்து ஓய்வு!

’எலி’ மகவா

கன்னிவெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட இந்த எலி, தன்னுடைய பணிக்காலத்தில் இதுவரை 71 கன்னிவெடிகளை கண்டிபிடித்துள்ளது.

  • Share this:
கம்போடியாவில் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதியில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. மனிதர்களை பயன்படுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் பணிகள் மிகவும் மெதுவாக இருக்கும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளைக் கொண்டு கன்னிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியில் எலி மகவா சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வந்தது. கன்னிவெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட இந்த எலி, தன்னுடைய பணிக்காலத்தில் இதுவரை 71 கன்னிவெடிகளை கண்டிபிடித்துள்ளது. செயலிழந்த கன்னிவெடிகளையும் அடையாளம் காட்டியுள்ளது. இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரப்படுத்தியது. அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பரிசு பெறுவது அதுவே முதன்முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கன்னிவெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபோ (Apopo) என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. தான்சானியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கன்னிவெடிகளை கண்டுபிடிக்க எலிகளுக்கு பயிற்சி வழங்கி, அதில் சிறப்பாக இருக்கும் எலிகளுக்கு ஹீரோ ராட் (Hero Rat) என்ற சான்றிதழை வழங்குகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் எலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் எலி மகவாவுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.

Also read... காதலியின் திருமணத்தின் போது அவரை சந்திக்க மணமகள் உடையில் சென்ற காதலன்: விரட்டியடித்த உறவினர்!

இதுகுறித்து எலி மகவாவை பராமரிக்கும் மலன் என்பவர் பேசும்போது, கன்னிவெடிகளை கண்டுபிடிப்பதில் எலி மகவா மிகவும் சிறப்பாக செயல்பட்டது. கடந்த 5 ஆண்டுகளின் அதனுடைய பணி மெச்சத்தக்க வகையில் இருந்தது. வயதாகிக்கொண்டே செல்வதால், அதனால் முன்பைப்போல் இயல்பாக செயல்பட முடியவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறது. எலி மகவாவுக்கு ஓய்வு தேவை என்பதை புரிந்து கொண்டு, இந்தப் பணியில் இருந்து விடுவிக்க இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். அபோபோ அமைப்பால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட புதிய எலிகளை தேர்தெடுத்துள்ள கம்போடிய கன்னிவெடி கண்டுபிடிக்கும் அமைப்பு, விரைவில் அவற்றை பணியில் ஈடுபடுத்த உள்ளது.

புதிய எலிகளுக்கு பயிற்சி அளிக்கும் வரை மகவா பணியில் இருக்கும் என்றும், அந்த எலிகள் நன்கு பயிற்சி பெற்றவுடன், மகவாவுக்கு முழுமையாக ஓய்வு கொடுக்கப்படும் எனவும் பராமரிப்பாளர் மெலன் கூறியுள்ளார். கன்னிவெடி சோதனையில் ஈடுபடுத்தப்படும் இந்த எலிகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. அங்கு மட்டுமே வாழக்கூடிய இந்த எலிகள் மிகவும் மோப்பச்சக்தி கொண்டவையாக இருக்கின்றன. மற்ற எலிகளை விட உயரம் மற்றும் எடையில், நீளத்தில் சிறியவையாக இருக்கும். இந்த எலிகள் கன்னிவெடிகள் மீது நடந்தாலும் அவை வெடிக்காது. சோதனையின்போது கன்னிவெடிகளை கண்டுபிடித்தவுடன், கீச் கீச் என கத்தத்தொடங்கும். அந்த ஒலியின் அடிப்படையில் கன்னிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு முறையாக அகற்றப்படும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: