ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மத்தியப்பிரதேசத்தில் சேற்றில் சிக்கிய லாரியை மீட்ட யானை - வைரலாகும் வீடியோ!

மத்தியப்பிரதேசத்தில் சேற்றில் சிக்கிய லாரியை மீட்ட யானை - வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், யானையின் உதவியுடன் சேற்றில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. ஒருமுறை அல்ல, பல முறை நடந்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி பகுதியில் சேற்றில் சிக்கிய லாரியை யானை ஒன்று தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக லாரி சேற்றில் சிக்கிக்கொண்டால் மற்றொரு வாகனம் வைத்து இழுப்போம் அல்லது கனரக வாகனம் / புல்டோசர் கொண்டு நகர்த்துவோம் ஆனால் மத்தியப்பிரதேசத்தில் தங்களுடன் வாழும் யானையை பயன்படுத்தியுள்ளனர். வீடியோவில், ஈரமான மண்ணில் ஒரு டிரக் சிக்கிக் கொண்டது. அதை சிலர் தள்ளுகிறார்கள். வாகனத்தை வெளியேற்ற முடியவில்லை.

அதன் பின்னர், யானை ஒன்று அந்த லாரிகளுக்குள் புகுந்து ஈரமான மண்ணில் சிக்கிய லாரிகளை மீட்க உதவுகிறது. யானையின் ஒரே தள்ளுதலில், மண்ணில் சிக்கிய லாரி வெளியேறுகிறது. சேற்றில் சிக்கிய சுமார் 3 லாரிகளை யானை தனது சக்தி வாய்ந்த தும்பிக்கையால் வெளியே தள்ளி வெளியே எடுத்தது. அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

' isDesktop="true" id="808495" youtubeid="pvDT2t0IeCU" category="trend">

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 300 பேர் கொண்ட குழு அமிர்தசரஸில் இருந்து வந்து ஷிவ்புரியின் கோலராஸ் பகுதியில் தங்கியிருந்தது. இந்த குழு அமிர்தசரஸில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேடுக்கு புறப்பட்டது. இந்த குழுவினர் கோலாரஸில் உள்ள ஒரு இடத்தில நின்றபோது, ​​மழை பெய்ததால், அவர்களது லாரிகள் சேற்றில் சிக்கின.

அந்த சீக்கிய சமூகம் ஏழு குதிரைகளையும் ஒரு யானையையும் தன்னுடன் கொண்டுள்ளது. யானைகள் மற்றும் குதிரைகள் அவர்களுடன் வாழ்வதாகவும், லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், யானையின் உதவியுடன் சேற்றில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. ஒருமுறை அல்ல, பல முறை நடந்துள்ளது என்று அந்தக் குழுவில் இருந்த குர்தேவ் சிங் கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Madhya pradesh, Viral Video