• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video : நம்ம மூஞ்சியா இது ...தன்னை போன்ற உருவத்தில் இருந்த பூனையை பார்த்ததும் அதிர்ந்த காட்டு லின்க்ஸ் - வைரல் வீடியோ!

Viral Video : நம்ம மூஞ்சியா இது ...தன்னை போன்ற உருவத்தில் இருந்த பூனையை பார்த்ததும் அதிர்ந்த காட்டு லின்க்ஸ் - வைரல் வீடியோ!

பூனையை பார்த்ததும் அதிர்ந்த காட்டு லின்க்ஸ்

பூனையை பார்த்ததும் அதிர்ந்த காட்டு லின்க்ஸ்

தற்போது இணையத்தில் விலங்குகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருவது போல, சிவிங்கிப் பூனை அல்லது சிவிங்கி (ஆங்கிலம்: Lynx) வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

  • Share this:
பொதுவாக காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை அனைத்தும் பூனை வகையை சேர்ந்தவையாக வகைப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் முகம் மற்றும் உடலமைப்பு ஆகியவை பூனையை போன்று இருக்கும். ஆனால் இவை அனைத்தும் அளவில் சற்று பெரிதாக இருப்பதால் இந்த அனைத்து வேட்டையாடும் மிருகங்களும் "Big Cat" என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் சிவிங்கிப் பூனை அல்லது சிவிங்கி (ஆங்கிலம்: Lynx)  என்று அழைக்கப்படும் மற்றொரு உயிரினம் பூனையை போன்றே இருக்கும். இவற்றின் காதுகளின் நுனி சற்று கூர்மையாக இருக்கும்.

மேலும் தற்போது இணையத்தில் விலங்குகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருவது போல, லின்க்ஸ் மிருகத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தன்னை போலவே இருக்கும் ஒரு பூனையை கண்டு அதிசயித்து பார்த்த காட்சிகள் பதிவாகியுள்ளன.வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட அந்த 15-வினாடி கிளிப்பில், வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் லின்க்ஸை கண்ணாடி தடுப்பு வழியாக பார்த்த வளர்ப்பு பூனை ஒன்று அதனை எழுப்ப கண்ணாடி கதவை தனது கால்களால் தடவியது. எதோ தன் பின்னால் இருப்பதை உணர்ந்த லின்க்ஸ் பதறி எழுந்து திரும்பி பார்த்தபோது தன்னை போலவே இருக்கும் பூனையை ஆச்சர்யப்பட்டு பார்த்துள்ளது.

 வீடியோ பதிவின் கருத்துகள் பிரிவில் பல வேடிக்கையான கமெண்ட்டுகளை யூசர்கள் பதிவிட்டு வருகின்றனர். போர்ட்டில் பாபி திஜெர்ம் என்ற பெயரில் இருக்கும் ஒரு யூசர், பூனையை லின்க்ஸ் எவ்வாறு அங்கீகரித்திருக்கும்? செல்லப்பிராணி பூனையை தன் தொலைதூர உறவினர் என்று லின்க்ஸ் நினைத்திருக்கும் என்று தனது கருத்துக்கு ஒரு வேடிக்கையான தொனியைக் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

ALSO READ |   டீ -கடையில் தட்டு கழுவும் குரங்கு...என்ன ஒரு கொடுமை இரக்கமே இல்லையா?கொந்தளிக்கும் இணையவாசிகள் - வைரலாகும் வீடியோ

மற்றொரு யூசர் இந்த வேடிக்கையான சம்பவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையை உருவாக்கினார். அவர் குறிப்பிட்டதாவது, “ லின்க்ஸ் மனதில் ஓடும் எண்ணம்: பூனை உண்மையில் சிறையில் இல்லை. ஆனால் சிறந்த வாழ்க்கை வாழ்கிறது. வித்தியாசமான ஃபர்-குறைவான கரடிகளால் (அதாவது மனிதர்களைத்தான் அவர் அப்படி விளக்கியிருக்கிறார்) வழங்கப்படும் உணவு, வேட்டையாடுபவர்களுக்கு பயப்படாமல் நாள் முழுவதும் தூக்கம், மேலும் அதிக சூரிய ஒளியை பெரும் மென்மையான வசதியான இடத்தைக் இந்த பூனை அனுபவித்து வருகிறது. நாமும் ஏன் இந்த பூனையுடன் செல்லக்கூடாது என்று லின்க்ஸ் யோசித்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

  

கணிசமான எண்ணிக்கையிலான மக்கள், கிளிப்பின் கட்னஸ் அளவு குறித்து கருத்து தெரிவித்தனர். சிலர் இது இணையத்தில் அவர்கள் பார்த்த மிகச் சிறந்த விஷயம் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆர்வமுள்ள சில நெட்டிசன்கள் இந்த வீடியோ எடுக்கப்பட்ட இருப்பிடத்தை அறிய விரும்பினார். இருப்பினும், அந்த வீடியோ எங்கே பதிவு செய்யப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை.

ALSO READ |  என்னென்ன செய்றான் பாருங்க.... நடனம் ஆடி ரசிகர்களை சேர்க்கும் நாய்... - வைரல் வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: