ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரூ.9000 க்கு பாத்ரூம் செப்பல்? ட்விட்டரில் விளம்பரம் கொடுத்த பிரபல ப்ராண்ட்.. “இல்ல எனக்கு புரியல” ரியாக்‌ஷனில் நெட்டிசன்கள்

ரூ.9000 க்கு பாத்ரூம் செப்பல்? ட்விட்டரில் விளம்பரம் கொடுத்த பிரபல ப்ராண்ட்.. “இல்ல எனக்கு புரியல” ரியாக்‌ஷனில் நெட்டிசன்கள்

ரூ.9000 க்கு பாத்ரூம் செப்பல்?

ரூ.9000 க்கு பாத்ரூம் செப்பல்?

ஒருவர் அந்த செப்பல் காண்பதற்கு அப்படியே பாத்ரூமில் உபயோகப்படுத்தும் செப்பல் மாதிரியே உள்ளது என கமெண்ர் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சாதாராண விலையில் கிடைக்கும் பொருட்கள் பிராண்ட் அந்தஸ்து பெரும்பொழுது அது அதிக விலைக்கு விற்கப்படுவதும் அதன் விளம்பரங்களை சோஷியல் மீடியாவில்  நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கலாய்த்து வருவதும் சகஜமாகி வருகிறது.

  அந்த வகையில் சொகுசு பிராண்டான Hugo Boss ஒரு ஜோடி நீல நிற செருப்புகளை ரூ.8,990க்கு விற்பனை செய்யும் விளம்பரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதிலும் அந்த விளம்பரத்தின் சுவாரஸ்யம் என்னவெனில் முதலில் ரூ.9000 என விலை நிறுவப்பட்டு பின்னர் ஆஃபர் என 10 ரூபாய் குறைத்து ரூ.8990க்கு கடைசி விலையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருவர் அந்த செப்பல் காண்பதற்கு அப்படியே பாத்ரூமில் உபயோகப்படுத்தும் செப்பல் மாதிரியே உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.

  மேலும் அந்த செப்பல் காண்பதற்கு அப்படியே 150 ரூபாய்க்கு வாங்கும் செப்பல் மாதிரியே இருக்கு எனவும், இந்த செப்பலில் லோகோவை தவிர வேற எதுவும் புதுவிதமாக இல்லை எனவும் கூறியுள்ளனர்.

  Read More : ஸ்கூல் வேனில் 15 அடி நீள மலைப் பாம்பு! வனத்துறையை அலறவைத்த பகீர் சம்பவம்!

  சிலர் இது 100 ரூபாய்க்கே கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.ஒருவர் நான் லட்சாதிபதி ஆனால் கூட இவ்வளவு விலைக்கு செப்பல் வாங்க மாட்டேன் என கூறியுள்ளார்.பாராகான் ஒருவேளை இதேபோன்ற செருப்புகளுக்கு 100 ரூபாய் வசூலிக்கக்கூடும் எனவும் கணித்துள்ளனர்.

  இது போன்று சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெறுகின்றன.சமீபத்தில்,ரூ.15,450 விலையுள்ள ஒரு சாதாரண ஷார்ட்ஸ் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்த படத்தை அர்ஷத் வாஹித் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்த பட்டாப்பட்டி கால்சட்டைக்கு 15 ஆயிரம் ? என்று அவர் கேப்ஷன் கொடுத்திருந்தார்.அந்த பதிவும் இணையதளத்தில் வைரலாகியது.

  தொடர்ந்து இந்த விளம்பரத்தை அனைவரும் கலாய்த்த வண்ணமும் பலர் அதனை ஷேர் செய்து ”என்னடா நடக்குதிங்க” என்றபடி யோசித்த வண்ணமும் உள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending News, Viral