ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரூ.3.7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு வெறும் 277 ரூபாய்க்கு வேணுமா? அசர வைத்த நபர்

ரூ.3.7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு வெறும் 277 ரூபாய்க்கு வேணுமா? அசர வைத்த நபர்

மாதிரி படம்

மாதிரி படம்

Trends | 4 படுக்கையறைகளைக் கொண்ட வீடு, ஒரு குடும்பம் ஆடம்பரமாக வாழ தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமுள்ள 4 படுக்கை அறைகளைக் கொண்ட சொகுசு வீட்டை 277 ரூபாய்க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும் என்றால், அந்த வாய்ப்பை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவீர்களா?... ஆனால் அதில் உள்ள முக்கியமான ட்விஸ்ட் குறித்து தான் இப்போது பார்க்கப்போகிறோம்...

  இந்தியாவில் லாட்டரி சீட்டு மூலமாக வறுமையில் வாடுபவர்கல் ஒரே நாளில் கோடீஸ்வரராகும் கதைகள் பற்றி அறிந்திருப்போம். அதேபோல் வெளிநாடுகளில் பல விதமான ரேஃபிள் என்ற விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதன் மூலம் தனது சொத்தை வாடகை மற்றும் அடமானம் இல்லாமல் பரிசாக கொடுக்க டேனியல் ட்வென்ஃபோர் என்பவர் முன்வந்துள்ளார்.

  இங்கிலாந்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு, பணவீக்கம் படாய்படுத்தி வருகிறது. இதனால் சொத்துக்களை விற்பது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. எனவே 29 வயதான டேனியல் ட்வென்ஃபோர், தெற்கு லண்டனில் உள்ள மிட்சாமில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட 4,00,000 பவுண்ட்கள் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 3.7 கோடி) நான்கு படுக்கையறை வீட்டை வெறும் £2 டிக்கெட்டுக்கு விற்க முன்வந்துள்ளார். இந்த வீடு தெற்கு லண்டனில் உள்ள மிட்சாமில் அமைந்துள்ளது.

  அவர் 200,000 டிக்கெட்டுகளை விற்று £400,000 திரட்ட முடியும் என நம்புகிறார். இதனையடுத்து ரேஃபிள் விளையாட்டில் வெற்றி பெறும் நபருக்கு வீட்டை எவ்விதமான அடமானம் மற்றும் வாடகை இல்லாமல் வழங்க உள்ளார். மேலும் வீட்டை விற்கும் போது முத்திரைக் கட்டணம் மற்றும் சட்டக் கட்டணம் போன்ற பரிமாற்றச் செலவுகளை ஈடுகட்டவும் இந்த டிக்கெட் விற்பனை முறையை ஆரம்பித்துள்ளார்.

  Also Read : அடிதடி... பறந்த சூட்கேஸ்.. விமான நிலையத்தில் ரகளை செய்த பெண்.!

  டேனியலின் கணக்குப்படி வீடு சரியான விற்பனை விலையை அடைய 1,55,000 டிக்கெட்டுகளை விற்க திட்டமிட்டுள்ளார். அப்படி திட்டமிட்ட டிக்கெட்டுக்கள் விற்கப்படவில்லை என்றால் வெற்றியாளருக்கு டிக்கெட் ரசீதுகளில் 70% திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கென்ட்டின் மெட்வேயில் உள்ள 4 படுக்கையறைகளைக் கொண்ட வீடு, ஒரு குடும்பம் ஆடம்பரமாக வாழ தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. லண்டனின் கலாச்சாரம் மற்றும் கலை அழகு ததும்பும் நகரத்தில் அமைந்துள்ள சொகுசு வீட்டில் 4 படுக்கை அறைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கிச்சன், வசதியான வரவேற்பு அறை மற்றும் அருகிலேயே லண்டன் விக்டோரியா மற்றும் செயின்ட் பான்க்ராஸுக்கு செல்லக்கூடிய ரயில் நிலையம் அமைந்துள்ளது.

  இங்கிலாந்தை பொறுத்தவரை கென்ட் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு, 9வது இடத்தில் உள்ளது. அங்குள்ள நில மதிப்பீட்டாளர்களின் ஆய்வின் படி, கென்ட் பகுதியில் 4 படுக்கை அறைகளைக் கொண்ட சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டால் மாதம் ஒன்றுக்கு £2,000 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,86, 515 வரை வாடகையாக கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral