• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மாடுகளுக்கு பானி பூரி ஊட்டிவிட்ட நபர் - வைரலாகும் வீடியோ!

மாடுகளுக்கு பானி பூரி ஊட்டிவிட்ட நபர் - வைரலாகும் வீடியோ!

மாடுகளுக்கு பானி பூரி ஊட்டிவிட்ட நபர்

மாடுகளுக்கு பானி பூரி ஊட்டிவிட்ட நபர்

வட இந்தியாவின் சிறந்த தெரு சிற்றுண்டிகளில் ஒன்று பானி பூரி. தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலம்.

  • Share this:
கொரோனோவின் கோரத்தாண்டவத்தில் உலக நாடுகள் சிக்கி தவிக்கின்றன. இந்தியாவில் பரவி வரும் இரண்டாவது அலையால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. COVID-19 தொற்றுநோயால் தற்போதுள்ள நாடு தழுவிய ஊரடங்கிற்கு மத்தியில், உணவு பிரியர்கள் தங்கள் அன்றாடம் கடைகள், தெருக்களில் சாப்பிடும் உணவை மிகவும் மிஸ் பண்ணுகின்றனர்.

ஆலு டிக்கி, வாடை பாவ், தாஹி பூரி, பாவ் பாஜி, பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், லஸ்ஸி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். வட இந்தியாவின் சிறந்த தெரு சிற்றுண்டிகளில் ஒன்று பானி பூரி. தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலம், இதனை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் மிஸ் பண்ணுகின்றன என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு மாடு மற்றும் அதன் கன்று பானி பூரியை அனுபவித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பானி பூரி விற்பனையாளர் பூரிஸை காரமான தண்ணீரில் நிரப்பி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு வழங்குகிறார். அதனை வாங்கிய அந்த வாடிக்கையாளர் பானி பூரிகளை சாப்பிடுவதற்கு பதிலாக, அருகில் இருந்த மாடு மற்றும் அதன் கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார். அவையும் அதனை ருசித்து சாப்பிடுகிறது.



 




View this post on Instagram





 

A post shared by sree130920 (@sree130920)






இந்த வீடியோ லக்னோவில் உள்ள ரெட் ஹில் கான்வென்ட் பள்ளிக்கு அருகில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தெரு உணவுக்கு மிகவும் பிரபலமான ஒரு சிறிய கடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைகளுக்கும் மாடுகள் வந்தால் அடித்து விரட்டுவதையும், பழைய மற்றும் மீதமுள்ள உணவை மாடுகளுக்கு கொடுத்து அதனை அவை உண்ணும் காட்சிகளை நாம் அவ்வப்போது பார்த்திருக்கிறோம். ஆனால் மாடுகளுக்கு பானி பூரி ஊட்டுவிடும் ஒரு மனிதனை பார்ப்பது இதுவே முதல்முறை என்பதால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

Also read... விடுமுறைக்காக சூப்பர் மார்க்கெட் ஊழியரின் சூப்பர் பிளான் - வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். கிஷோர் குமாரின் ‘இன்டெஹான் ஹோ காய்’ பாடல் பின்னணியில் இசைக்கப்படும் இந்த வீடியோவை 58,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு எண்ணற்றோர் கமெண்ட்ஸ்களும் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த மனிதனுக்கு ஆசீர்வாதம் என தெரிவித்தார், மற்றொரு இந்த வீடியோ இன்றைய நாளின் சிறந்த வீடியோ என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு மாடு ஒரு கேட்வாக் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் ஒரு வெள்ளை மற்றும் பழுப்பு நிற மாடு சாலையில் கேட்வாக் போல நளினமாக நடந்து செல்வதை பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து மற்ற மாடுகளும் வந்தன. இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களின் வைரலானது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: