ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பரபரப்பான சாலையில் காரின் டாப்பில் காதல் ஜோடி ரொமான்ஸ்.. வைரல் வீடியோ

பரபரப்பான சாலையில் காரின் டாப்பில் காதல் ஜோடி ரொமான்ஸ்.. வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | பரபரப்பான சாலையில் காரின் டாப்பில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லக்னோவில் ஓடும் பைக்கில் காதல் ஜோடி எல்லை மீறிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி முடிவதற்குள் பரபரப்பான சாலையில் காரின் டாப்பில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரொமன்ஸ் உடன் மட்டுமில்லாமல் ஆபத்தான முறையில் காரின் டாப்பில் அமர்ந்தவாறு பயணித்தும் உள்ளனர். காதல் என்னும் பெயரில் இளம் ஜோடிகள் பொதுவெளியில் அத்துமீறும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

அன்கூர் திக்ஷீத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காதல் ஜோடிகள் காரின் டாப்பில் பயணிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சொகுசு காரில் பயணிக்கும் காதல் ஜோடி சன்ரூப் வழியாக காருக்கு மேலே வருகின்றனர். பரபரப்பான அந்த சாலையில் வாகங்கள் சென்று கொண்டிருக்கும் போதே இருவரும் கட்டுபிடித்து ரொமன்ஸ் செய்கிறார்கள். கால்களை காருக்கு வெளியே தொங்கவிட்டு ஆபத்தான முறையில் பயணித்து கொண்டிருந்தனர். இந்த காட்சிகளை அந்த சாலையில் மற்றொரு வாகனத்தில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.  இந்த வீடியோவை பலரும் சோசியல் மீடியோவில் ஷேர் செய்து வருகின்றனர். அண்மையில் தான் லக்னோவில் பைக்கில் செல்லும் காதல் ஜோடி வரம்பு மீறி நடந்து கொண்ட வீடியோ வைரலானது. தற்போது காரில் காதல் ஜோடி அத்துமீறி உள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் காதல் என்ற பெயரில் இளம் வயதினர் இதுப்போன்ற ஆபத்தான முறையில் பயணம் செய்வது மற்றும் பொது இடங்களில் அத்துமீறும் செயல்களுக்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Trending, Viral