மறைந்த பாகனுக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்த யானை... மனதை உருக்கும் சம்பவம்

மரியாதை செலுத்திய யானை

கேரளாவில் 25 ஆண்டுகாலம் வளர்த்த பாகன் இறந்துவிட்ட நிலையில், அவரது உடலுக்கு யானை கண்ணீர்மல்க விடை கொடுத்துள்ளது.

  • Share this:
யானை பிரம்ம தத்தனை 25 ஆண்டுகாலம் வளர்த்தவர் ஓம்மனச்சேட்டன். 74 வயதான அவர் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உற்றார் உறவினர்கள் ஏராளமானோர் கூடி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அவர் கால்நூற்றாண்டாக வளர்த்த யானை பிரம்மத்தன் அஞ்சலி செலுத்துவதற்காக அழைத்து வரப்பட்டது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபோது, யானை பிரம்மத்தன் இமை கொட்டாமல் தன்னை வளர்த்தவரின் உடலையே பார்த்தது.

தன்னுடைய தும்பிக்கையை உயர்த்தி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரம்மதத்தன், வளர்த்தவருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றது. குன்னக்காட் தாமோதிரன் நாயர், கோட்டயம் அருகில் உள்ள லக்காட்டூரில் வசித்தார். அப்பகுதியில் ஒம்மனச்சேட்டன் என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் அடையாளம் தெரியும். யானை வளர்ப்பில் மிகுந்த அனுபவம் கொண்ட அவர் குழந்தை பருவம் முதல் யானை வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். தன் வாழ்நாளில் ஏறத்தாழ 60 ஆண்டுகள் யானைகளை பராமரிப்பு செய்துள்ளார்.

யானைகளின் மீது மிகுந்த அன்பும், பாசமும் காட்டும் ஒம்மனச்சேட்டன் மீது யானைகளுக்கும் பாசம் அதிகம். பராமரிப்பில் ஈடுபட்ட இத்தனை ஆண்டு காலத்தில் இதுவரை யானைகளிடம் கடுமையாக அவர் நடந்ததில்லை என கூறப்படுகிறது. தடி எடுத்து அடிக்காமல் யானையை வளர்த்த ஒம்மனச்சேட்டன், பிரம்ம தத்தனின் நேசத்துகுரியவராக இருந்துள்ளார்.

Also Read :  கோவிட் -19 நோயாளிகளுக்கு ரூ.10க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் தம்பதி - பொதுமக்கள் நெகிழ்ச்சி!

அம்மாநிலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் எல்லாம் பிரம்மதத்தனுடன் ஒம்மனச் சேட்டனையும் பார்க்க முடியும் என கூறுகின்றனர். இருவரும் ஒன்றாக இணைந்து கடைசியாக திரிச்சூர் பூரம் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாக்களில் கலந்து கொள்வோர் பிரம்மதத்தனையும், பாகன் ஒம்மனச்சேட்டனையும் தனியாக நலம் விசாரிக்கும் அளவுக்கு இருவரும் அறியப்படுபவர்களாக இருந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி தன்னுடைய 74 வது வயதில் உயிரிழந்தார். இதனைக் கேள்விப்பட்ட யானை பிரம்மதத்தனின் உரிமையாளர்கள் பலாட் ராஜேஷ் மற்றும் மனோஜ் சகோதரர்கள் மெலம்பாராவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒம்மனச்சேட்டன் வீட்டுக்கு அழைத்து வந்து பிரம்மதத்தனை, அவருக்கு இறுதி மரியாதை செய்ய வைத்துள்ளனர்.

Also Read : ஜார்க்கண்டில் ஏலியனா? வைரல் வீடியோவின் பின்னணி!

யானை கண்ணீர்விட்டதை பார்த்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அழத் தொடங்கினர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அங்கிருப்பவர்களை மட்டுமல்லாது சமூக வலைத்தளவாசிகளையும் நெகிழச் செய்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியதையடுத்து, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஒம்மனச்சேட்டனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Published by:Vijay R
First published: